பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் உரையெல்லாம் அறிவார்ந்த உரைகள்: அனுபவக் குவியல்கள்: ஆன்ற தமிழ்ச் சுரங்கங்கள்; பெரிதும் போற்றப்படும் புதையல்கள்; ஆழமான கருத்துற்றுக்கள். இங்கு எனது உரை எப்படி அமைகிறது என்றால், அவர்கள் தோண்டிய மணற் கேணியின் ஆழத்தில், இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தோண்ட ஆசைப்பட்டிருக்கிறேன். அவ்வளவுதான்; இது ஒரு துணிவான முயற்சிதான். இந்த முயற்சிக்காக, ஏற்கனவே தோண்டியிருக்கும் மணற்கேணியின் கரையை நான் இடிக்கவில்லை. ஏற்படுத்திய கட்டுக்கோப்பை நான் உடைக்கவில்லை. மணல் சரிவை ஏற்படுத்தி மூடும் வேலையையும் செய்யவில்லை. ஏற்கனவே இருப்பதிலிருந்து இன்னும் கொஞ்சம் ஆழம்; கொஞ்சம் ஆய்வு; அவ்வளவுதான். அதற்காகக் குறள்களிலிருந்து ஓர் எழுத்தைக் கூட்டவும் இல்லை. சிதைக்கவும் இல்லை. சீர் செய்யவும் இல்லை. மாற்றவும் இல்லை. மறைக்கவும் இல்லை. நான் தெரிந்து தெளிந்து, புரிந்து, அறிந்து உறுதிப்படுத்திக் கொண்ட பிறகுதான். இந்தப் புதிய உரையை எழுதியுள்ளேன். என்னால் இயன்றது என்கிறபோதே, எனது பலவீனமும் இதில் அடங்குகிறது. அதனால், குறைகள் நேரலாம். குறுகுறுப் பையும் உண்டாக்கலாம். என் கருத்துக்கு எதிர்க்கருத்து நிச்சயம் உங்களுக்கு ஏற்படும். அதற்காகக் கோபப்படாமல் என்னிடம் எடுத்துக் கூறலாம். கலந்து பேசலாம். இணக்கமான ஒரு நடுநிலைக் கருத்துக்குள் நாம் இணையலாம். இந்தப் பக்குவமான மனத்துடன் என் உரையைப் படிக்க வேண்டுகிறேன். அகத்தாலும் புறத்தாலும் பெறுகிற உவகையே மனிதர்க்கு முக்கியம் என்பதை வலியுறுத்தும் வள்ளுவப் பெருமான், கருத்துக்குள் நாம் இணையலாம். இந்தப் பக்குவமான மனத் தோடு என் உரையைப் படிக்க வேண்டி, தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு, தெளிவான ஒரு புதிய உரையைப் படைத்து மகிழ்கிறேன். o விளையாட்டுத்துறை நூல்கள் எழுதிக் கொண்டிருந்த உங்களுக்கு, இப்படி ஒரு விருப்பம் எப்படி எழுந்தது? என்று