பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


144 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 11. செய்ந்நன்றி அறிதல் இல்லறத்தில் வாழ்கிறவர்கள் மட்டுமல்ல. எல்லோருக்கும் இயல்பாக இருக்க வேண்டியது இனிய சொற்கள்தாம் என்பதற்காக, பத்தாம் அதிகாரத்தில் இனியவைகூறல் என்றார். இனியவை கூறல் என்பது சொல்லால் சுகமளிக்கும் பண்பாகும். சொற்கள் மட்டுமே வாழ்க்கையாகா அல்லவா செயலும் சேர்ந்ததுதானே வாழ்க்கை. செயலாலும் மற்றவர்களின் சிந்தை குளிரச் செய்ய வேண்டும். சுகமான வாழ்வு பெற வைக்கவேண்டும் என்ற சீர்மையைக் குறிக்கவே செய்ந்நன்றி அறிதல் என்று அதன்பின் கூறுகிறார். செய் என்றால் செய்கை என்றும், செய்கை என்றால் ஒழுக்கம் பண்படுத்தல் உடன்பாடு என்றும் பொருள் உண்டு. நன்றி என்றால் நன்மை, உதவி, ஒழுக்கம் என்ற பொருள்கள் உண்டு. அறம் சார்ந்த உதவி என்றும் கொள்ளலாம். அறிதல் என்றால் உணர்தல், தெரிதல், பயிலுதல், தெளிதல் என்று பல பொருட்கள் உண்டு. பிறர் நமக்குச் செய்த நன்மையாயினும், பிறர்க்கு நாம் செய்கிற நன்மையாயினும் ஏற்றுக் கொள்ளுகிற முறைகள் மூன்று விதமாய் அமைந்துள்ளன. ஐம் புலன்களால் நன்மையை உணர்தல், செம் புலனாம் சிந்தையால் நன்மையின் மேன்மையைத் தெரிதல். உணர்ந்து தெரிந்த உண்மையை உரமூட்டும் ஆன்மாவால் தெளிதல் என்பதாகும். ஆகவே, ஒருவர் செய்கிற உதவியை ஒருவர்க்குச் செய்கிற உதவியை அறிந்து வாழ்கிற செயல் வாழ்க்கை முறையைச் சொல் வாழ்க்கை முறைக்குப் பிறகு வைத்து நல்வாழ்க்கை வாழ வழி காட்டுகிறார் வள்ளுவர் பெருந்தகை.