பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 145 101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது பொருள் விளக்கம்: செய்யாமல் = போராட்டம் (மனதால் உடலால்) இல்லாமல் செய்த மனப்பூர்வமாக, உடல் ஆர்வமாகப் புரிந்த உதவிக்கு = ஒழுக்கம் சார்ந்த அறிவான உதவியானது வை + அகமும் = நுண்மையான மனதையும் (மனம்) வான் அகமும் = செம்மாந்த மனத்தையும் (ஆன்மா) ஆற்றல் = வெற்றி கொள்கிற; அரிது - சிறப்பு பெற்றதாகும் செம்மாந்த மனத்துக்கு மேல் சிறப்பு பெற்றது சீரான உதவியாகும். சொல் விளக்கம்: மல் = போர்புரிதல், உதவி = அறிவான நன்மை வை = நுண்மையான, கூர்மையான; வான் = உயர்ந்த மேன்மையான ஆற்றல் = வலிமை, ஞானம், அதிகம், வெற்றி அரிது - அருமையானது, எளிதாய் கிடைக்காதது. முற்கால உரை: ஒருவன் பிறருக்கு உதவி வேண்டாது செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண் உலகத்தையும் தந்தாலும் ஒத்தல் அரிது. தற்கால உரை: தமது உதவியை முன் பெறாதவர் தமக்குச் செய்த உதவி ஒப்பற்றது. புதிய உரை: செய்யலாமா வேண்டாமா என்று போராட்டம் இல்லாமல், ஒருவருக்குச் செய்கிற ஒழுக்கம் சார்ந்த உதவியானது, நுண்மையான மேன்மையான மனம் பெற்றிருக்கும் சிறப்பையும் வெற்றி கொள்ளும் வலிமை பெற்றதாகும். விளக்கம்: உடல், உள்ளம், ஆன்மாவால் ஒன்றிச் செய்கிற உதவிதான் ஒப்பற்றது. இம்மூன்றும் ஒன்று சேர்ந்து செய்கிற உதவிக்கு ஈடு எதுவும் இல்லை என்று உடன்பாடான உதவியின் முதன்மை நிலையை முதல் குறளில் குறித்திருக்கிறார்.