பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா விளக்கம்: எழுமை என்பதற்கு எழு பிறப்பு என்றார்கள். எழு' விற்குப் பின் பிறப்பு என்ற சொல் அடுத்து வந்தவுடன் அவர்கள் எண்ணத்திற்கு அது உதவியிருக்கிறது. இங்கே நான் எழுமை என்ற சொல்லுக்கு வாழ்வில் உயர்வு பெறுதல் என்றும், எழு என்பது கிளர்ச்சி மனது. பிறப்பு என்பது ஆரம்பம் என்று விளக்கம் தந்துள்ளேன். எழுச்சியுடன் கிளர்ச்சியுடன் உயர்வு பெற முயற்சிக்கிறபோது ஏற்படுகிற இடையூறுகளிலிருந்து வெற்றி பெற, தமது துன்பம் துடைத்து உதவியவர்களை நினைத்து நினைத்து, மனதில் உற்சாகத்தை விதைத்து விதைத்து வெற்றி பெறுவார்கள் அறிவாளர்கள். உதவிய உயர்ந்தோர்களை நினைக்கிற போது மனத்துக்குத் தெளிவும் உறுதியும் உற்சாகமும் பெருகும் என்று 7 வது குறளில் வள்ளுவர் கூறுகிறார். 108. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று பொருள் விளக்கம்: நன்றி = (நன்று + இ) வாழ்வில் அன்பு பெற்றதை மறப்பது = மனதிலிருந்து விட்டு விடுவது நன்று அன்று = நன்மையை அளிக்காது நன்று = அன்பினால் பெற்ற இனிய சுகத்தை அல்லது = அழித்து விடுகிற தீவினைகளை அன்றே மறப்பது - அப்பொழுதே நினைவில் இருந்து அகற்றிவிடுவது நன்று = நல்ல வாழ்வையும் நல்லஇன்பத்தையும் அளிக்கும் சொல் விளக்கம். நன்று = சுகம், இன்பம், வாழ்வு இ = அன்பு, ஆச்சரியம்; அல்லது = தீவினை முற்கால உரை: பிறர் செய்த நன்றியை மறப்பது தருமம் அல்ல. அவரது தீமையை மறப்பது தருமம். தற்கால உரை: பிறர் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல. அவர் செய்த தீமையை அப்பொழுதே மறந்து விடுவது நல்லது.