பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


164 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சொல் விளக்கம்: தாழ்வு - அவமானம், தாழ்ச்சி, வறுமை நன்றி அறம், ஒழுக்கம்; நடு = நடுவுநிலைமை முற்கால உரை: நடுநிலைமையினின்றவன் வறுமையைப், பெரியோர் தாழ்வாக நினையார் என்பதாம். தற்கால உரை: நடுநிலையாளன் தாழ்வு விரைவில் நீங்கிவிடும் என்பதால், அதனைக் கேடாக உலகத்தார் எண்ண மாட்டார்கள். புதிய உரை: நடுவுநிலை காக்கும் பொருட்டு ஒருவர் பெறுகிற அவமானத்தையும், தாழ்ச்சியையும், வறுமையையும், நன்மக்கள் போற்றுவார்களே ஒழிய, தாழ்வாகத் தூற்ற மாட்டார்கள். விளக்கம்: நடுவுநிலைமையில் நிற்கும்போது. கெடுவும் வரும். கேண்மையும் வரும். மேன்மையும் தரும் என்றாலும், மக்களுக்குச் செய்கிற பணிக்கு மாற்றாகக் கிடைப்பது தூற்றலும், பொருள் இழப்பும், மனச்சலிப்பும் தான். இந்தச் சூழ்நிலை நன்றாக வேண்டும். வென்றாக வேண்டும் என்பதால், எதையும் ஏற்றுக் கொள்ளும் இதயம் உள்ளவர்கள், உலகம் பழிப்பதையும் உளமார ஏற்றுக் கொள்வார்கள். அப்படி ஏற்றுக் கொள்கிற ஒழுக்கம்தான். விழுப்பம் ஆகும். ஆகவே, வருகிறதை உறுதியாக ஏற்றுக் கொள்வது நடுவுநிலைமைக்குப் புகழே தவிர, இகழ் அல்ல என்பதை 7 வது குறளில் கூறுகிறார். பொருள் விளக்கம்: சமன்செய்து = (பிரிவுக்குள்ளானவர்களை) சமமாகப் பாவித்து சீர்தூக்கும் ஒழுங்கு செய்தும், தண்டித்தும் வாழ்வு தருகிற கோல்போல = அரசன் கோலாகிய செங்கோலின் அரசாட்சி போல அமைந்து செய்து முடித்து ஒருபால் அவரவர்க்குரிய உரிமையையும் கடமையையும் மதித்து