பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/173

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 17 | 123. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் பொருள் விளக்கம்: செறிவறிந்து = எந்த உறவிலும் எல்லை கடவா நிலையை அறிந்து அறிவறிந்து = அதனை ஐம்பொறி உணர்வால் தெளிந்து அடங்கப் பெறின் = செய்யத் தக்கதைச் செய்கிறபோது சீர்மை பயக்கும் = நன்னடை வளர்ந்து, சிறப்பைக் கொடுக்கும். சொல் விளக்கம்: அறிவு - ஐம்புலன் உணர்வு செறிவு = உறவு, எல்லை கடவாத நிலை, கூறியது மறுக்காமை சீர்மை = நன்னடை, நல்லொழுக்கம், புகழ், சிறப்பு முற்கால உரை: ஒருவன் அடங்கி நடப்பானாகில், அவ் வடக்கமே மேன்மையைத் தரும். தற்கால உரை: அடக்கமாக வாழ்தலே அறிவுடைமை என்று அடங்கி நடப்பானேயானால் உலகத்தார் அவனை மேலாக மதிப்பார்கள். புதிய உரை: உலகத்திலுள்ள உறவுகளின் எல்லை அறிந்து, அவற்றை உணர்ந்து, செய்யத் தக்கதைச் செய்கிறபோது, நல்லொழுக்கம் பெருகும்; புகழாகிய சிறப்பும் மிகுதி பெறும். விளக்கம்: அடக்கம் என்பது என்ன? உலக உயிர்களிடையே வாழ்கிற போது, அவற்றின் எல்லையை அறிந்து, அதற்கேற்றபடி செய்து ஒழுகுகிற சிறப்பான செயல். அதுவே அடக்கம் ஆகும். அருமையும் ஆகும். எல்லை கடவாமை என்பது, கூறுவதில் அருளாண்மை, அதை என்றுமே மறுக்காத மறக்காத பேராண்மை. ஐம்புலன்களின் உயர்வுகளை வளர்த்திருக்கும் செயல் ஆண்மை. இதுதான் அடக்கத்தின் குணநலன்களாகும். ஐம்புலன்களின் உணர்வுதான் அறிவாக (Sense) விரிகிறது. புலன்களில் ஒன்று போனாலும் அறிவின் கூறுகள் குறையும். ஐம்புலன்களின் உணர்வைத்தான் ஆங்கிலத்தில் Common Sense