பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


178 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா I கூறுகிறார். நல்ல சொற்களைப் பேசத்தான் நா இருக்கிறது. எவ்வளவு இனிய சொற்களைப் பேசினாலும், இதில் இருந்து மாறவே கூடாது. மாறிக்கொண்டு ஒரு சொல், தீய சொல்லாகப் பேசிவிட்டால், பேசிய பின் பெருமை போகும். சுகம் போகும். நன்மையும் நாசமாகும். அதுபோலவே, கேட்பவர்களின் மனமும் செவியும் கலக்கமடையும். அதனால்தான் தீய சொல் என்று கூறாமல் தீச் சொல் என்றார். தான் இருக்கும் இடத்தை மட்டுமன்றி. சேர்ந்துள்ள இடத்தையும் தீயானது அழிக்கும். அதுபோல நாவானது தானும் கெட்டுத் தம்மைச் சுற்றியுள்ள மற்ற புலன்களையும் கெடுத்துவிடும். ஆகவேதான், நாக்குக்காக இரண்டு குறள்களை அடுத்தடுத்துத் தந்துள்ளார். ஐம் பொறிகளிலே ஆழமான வீரியம் உள்ள பொறி நாப்பொறி, அதுவே தீப்பொறி என்று நாவின் சக்தியைக் கூறி அதை அடக்குபவரே ஆற்றலாளர் என்று கூறுகிறார். 129. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு தீயினால் சுட்ட புண் ஆறும், உள் ஆறாதே, வடு நாவின் சுட்டஆல் என்று இந்தக் குறளைப் பகுத்திருக்கிறேன். பொருள் விளக்கம்: தீயினால் சுட்டபுண் ஆறும் = தீயினால் சுட்டபுண் ஒருநாள் ஆறிவிடும்; வடு - வாளாக, வண்டாகத் தாக்குகிற நா = தீச்சுவாலை குணம் கொண்ட நாக்கானது சுட்ட ஆல் = சுட்டு ஏற்படுத்திய நஞ்சானது ஆறாதே = வாழ்நாள் முழுவதும் தணியாமல் மாறாமல் வதைத்துக் == கொண்டேயிருக்கும் சொல் விளக்கம்: வடு - வாள், வண்டு, வண்டாகத் தாக்குகிற நா = தீச்சுவாலை, குணம் கொண்ட நாக்கு சுட்டஆல் = சுட்டு ஏற்படுத்திய நஞ்சானது ஆறாதே - வாழ்நாள் முழுவதும் மாறாமல் தணியாமல் வதைத்துக் கொண்டேயிருக்கும். முற்கால உரை: தீயினால் சுட்டபுண், மெய்க்கண் கிடப்பினும் மனத்தின்கண் அப்பொழுதே ஆறும். வெவ்வுரையால் சுட்ட வடு எஞ்ஞான்றும் ஆறாது.