பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை I 79 தற்கால உரை: தீயினால் சுட்ட புண்ணினால் ஏற்பட்ட துன்பம் மனத்தை விட்டு நீங்கிவிடும். கடுஞ்சொல்லால் ஏற்பட்ட மனப்புண் ஒரு போதும் நீங்காது. புதிய உரை: இயற்கைத் தீ சுட்ட புண் ஆறிவிடும். செயற்கைத் தீச்சுவாலையான நாக்கு சுட்ட நஞ்சு, உடலை விட்டு என்றுமே நீங்காது மாறாமல் நிலைத்துப் போய்விடும். விளக்கம்: தீக்காயத்தை மருந்து ஆற்றும், பிறகு காலமே அந்தக் காயத்தை ஆற்றும். ஆனால், வடு என்பது தழும்பு மட்டுமன்று. வாள், வண்டு, குற்றம் என்னும் பொருளை உடையது. வடு சுட்டது என்பது. உடலில் வாளாகப் பாய்ந்து. மனத்தை வண்டாகக் குடைந்து, தடித்து, தழும்பேறிய நாக்கு. அது தீச்சுவாலை போல தீய்க்கும் தன்மையால், கொடிய நஞ்சாக உள்ளே புகுந்து நாடி நரம்புகளில் ஏறி அமர்ந்து, மின்னலாகத் தாக்கி சின்னா பின்னப்படுத்தி விடுகிறது. 7,8 குறள்களில் நாவின் இயல்பான சுவைக் கொடுமை, சொல் கொடுமை பற்றிப் புறத்தன்மையைக் கூறிய வள்ளுவர், 9ம் குறளில் அகம் படுகிற கொடுமையைப் படம் பிடித்துக் காட்டுகிறார். சொல் என்பது கொல் என்பதற்குச் சமம். சொல்லை ஆலாக மாற்றாமல் பாலாக உதவு என்பதே வள்ளுவரின் உள்ளமாகும். 130. கதம்காத்து கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து பொருள் விளக்கம்: கதம் காத்து = வெளிப்புறப் பாதிப்புகளினால் ஏற்படும் கோபத்தையும் தன்னுடைய வலிமையையும் அடக்கி கற்று உழைத்து = அதனால் பெற்ற அனுபவங்களைக் கற்று ஆற்றின் = வருந்தி ஈட்டிக் கொண்டு செவ்வி = ஏற்ற சமயம் அறிந்து அறம்பார்க்கும் = ஒழுக்கத்தைக் காக்கும் அறனே அடங்கல் ஆற்றுவான் = அடக்கத்தைக் கடைப்பிடிப்பவன் ஆவான்.