பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


184 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 133. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் பொருள் விளக்கம்: ஒழுக்கம் உடைமை = நல்ல பழக்கமான ஒழுக்கம் உள்ளவரால் குடிமை = (தான்) பிறந்த குடியையே உயரச் செய்ய முடியும். இழுக்கம் = (அந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும் முறைகளில்) குறையும் தளர்வும் பின்வாங்குதலும் நேர்ந்தால் இழிந்த மிகவும் கீழ்மையான பிறப்பாய்விடும் - அச்சத்தைத் தந்து செயல்களில் மீளாத மயக்கத்தை உண்டு பண்ணும். சொல் விளக்கம்: குடிமை = பிறந்த குடியை உயரச் செய்யும் தன்மை இழுக்கம் = குறை, தளர்வு, பின்வாங்குதல், விலகுதல் இழிந்த கீழ்மையான, பிறப்பு - அச்சம், தொடக்கம், மயக்கம். முற்கால உரை: தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கமுடைமை குலனுடைமையாம். அவ்வொழுக்கத்தில் தவறுதல். அவ்வருணத் தில் மிகவும் தாழ்ந்த வருணமாகிவிடும். தற்கால உரை: நல்லொழுக்கம் தீயொழுக்கம் ஆகியவற்றைக் கொண்டே மக்களின் உயர்வு தாழ்வு குடிப்பிறப்பு நிலைகள் மதிப்பிடப்படும். புதிய உரை: ஒருவரது ஒழுக்கத்தால்தான் அவர் பிறந்த குடிப் பெருமை பெறுகிறது. அவர் அந்த ஒழுக்கத்தில் தவறி விலகிப் பின்வாங்கி வாழ்கிறபோது, அவரது வாழ்வே இருண்டு மயக்கத்திற்கு உள்ளாகிவிடும். விளக்கம்: பிறப்பும் குலமும் எவர் கையிலும் இல்லை. அதன் 畢 : i - 瞬 - i. = r - # - # | - - o - o i. (3 H சிறப்புக்கும் பெருமைக்கும் ஒருவர் ஒழுக்கமும் உழைப்புபே உறுதுணையாகிவிடும். ஆகவே, புகழ் பெற்ற குடியில் பிறந்து அதன் பெருமையைக் காப்பது பெருஞ் சிறப்பு அல்ல. அது சாதாரணம்தான். சிறப்பு இல்லாத ஒரு குடியில் பிறந்து, தன்