பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 195 141. பிறர்பொருளான் பெட்டொழுகும் பேதமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல் பொருள் விளக்கம்: பிறன் பொருளான் = பிறர் உடைமைகளை அபகரித்து ஆண்டு கொள்ள பெட்டு ஒழுகும் பொய் பேசி நடந்து கொள்ளுகிற பேதமை = அறிவில்லாத்தனமானது, அறம் பொருள் = ஒழுக்கமும், நல்உடம்பும் கண்டார்கண் இல் = உள்ளவர்களிடத்தில் இருக்காது சொல் விளக்கம்: பெட்டு = பொய்; அறம் = ஒழுக்கம், பொருள் - உடம்பு; பேதமை = அறிவின்மை முற்கால உரை: பிறனுக்குப் பொருளாந் தன்மையை உடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை, ஞாலத்தின்கண் அற நூலையும் பொருள் நூலையும் அறிந்தார் மாட்டில்லை. தற்கால உரை: பிறன் மனையாளைக் காதலித்தல் களவும் பாவமுமாம். புதிய உரை: பிறரது உடைமைகளைப் பறிப்பதற்காக, பொய் பேசி ஒழுகும் தன்மை, நல்லுடலும் நல்லொழுக்கமும் கொண்டவர் களிடத்தில் இருக்காது. விளக்கம்: பிறர் பொருளுக்குப் பேயாய் அலைபவர்கள் பலர். நெஞ்சில் வஞ்சகம், நேர்மையின்மை, பொய், புனைகருட்டு, இப்படி, அவரது மனம் கீழ்மையடையக் காரணம் ஒழுக்கமின்மை. அந்த ஒழுக்கம் கெட்டதால் உடல் கெட்டு, நலம் கெட்டு, அதன் காரணமாகவே நினைவும் மனமும் கெட்டு குறுக்கு வழியில் நடக்க முயல்கிறது. நல்ல ஒழுக்கமும் நல்ல உடலும் இருக்கும் பொழுது, உழைத்து வாழவேண்டும் என்ற வேட்கையே எழும் என்பதைக் குறிக்கவே, பிறர் பொருளை நினைப்பதே பேதமை என்று முதல் குறளில் சுட்டிக்காட்டுகிறார்.