பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 15. பிறனில் விழையாமை பிறனில் + விழையா + மெய் என்று இந்த அதிகாரத்திற்குரிய தலைப்பைப் பிரித்திருக்கிறோம். அடுத்தவர் வீட்டைப் பற்றிய, வீட்டிற்குரிய எதையும் விரும்பாத திண்மை என்று இதற்குப் பொருள். பிறனில் என்றால் பிறர் மனைவி என்றே அனைவரும் ஆணித்தரமாகப் பொருள் கொண்டு, அழுத்தந்திருத்தமாக விளக்கம் அளித்திருக்கிறார்கள். இல் என்றால் குடி என்றும், மனைவி என்றும், வீடு என்றும், இல்லறம் என்றும் பொருள். வீடு என்றால் விடுதல், முடிவு, என்று அர்த்தம். விழையா என்றால் ஆசைப்படாத, மெய் என்றால் திண்மை என்றும் ஒரு பொருள் உண்டு. 「 ஒரு வீடு என்றால், ஒருவனின் மனைவி மட்டும்தான் இருப்பாளா? அந்த வீட்டின் மனை, உள்ளே இருக்கும் பொருள்கள், பொன், வெள்ளி நகைகள், பணம் எல்லாமே இருக்குமே! அதையெல்லாம் பெண்ணுக்குப் பிறகு கூறவே ஒதுக்கி விட்டார்கள் போலும். 13 ம் அதிகாரத்தில் மனத்தின் அடக்கம் பற்றியும். 14 ம் அதிகாரத்தில் உடலின் ஒழுக்கம் பற்றியும் பேசிய வள்ளுவர் 15ம் அதிகாரத்தில் மனமும் உடலும் ஆசையால்தான் கெடுகின்றன. ஆசை என்பது அடுத்தவர்க்குரிய உடைமைகளில்தான் பாய்ந்து செல்கிறது; ஆக அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளிலும் உடமையிலும் ஆசைப்படாத திண்மை வேண்டும். அந்தத் திண்மை எங்கிருந்து எப்படி கிடைக்கும் ? திண்மையான உடலில், திண்மையான மனம். ஆசையை அழித்துப்போடும் திண்மை, அதனால்தான் அறன் என்பவன் பிறன் கொண்டிருக்கும் பொருட்களில் பேதமையுடன் விரும்பக் கூடாது என்று இந்த அதிகாரத்தைப் பிறனில் விழையாமை என்று உள்ளர்த்தத்துடன் வைத்துளார்.