பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/206

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 205 சொல் விளக்கம்: வரை - மலை, விவாகம் முற்கால உரை: ஒருவன் அறம் செய்யாது பாவமே செய்யினும், பிறன் மனைவியை விரும்பாமையே நன்மை என்பதாகும். தற்கால உரை: ஒருவன் அறத்தைச் செய்யாது மறத்தையே செய்யினும் பிறன் மனையாளைக் காதலியாதிருத்தல் நன்மை. புதிய உரை: ஒழுக்கத்தைக் காக்காதவன் பல தீவினைகளைச் செய்தாலும் தகும். ஆனால் பிறன் மனைவியை நயந்து செய்யும் செயலானது நன்மை தராது. நாசத்தையே நல்கும். விளக்கம்: பகையை வளர்க்கும் பாவத்தை வளர்க்கும் பயத்தை வளர்க்கும் பழியையும் வளர்க்கும் கொடிய காரியம் பெண்களை விரும்புவது. அதிலும் பிறர்க்குரிய மணமான பெண்ணை விரும்புவது. இது ஆரம்பத்தில் ஆனந்தம் அளிப்பதைப் போல் இருந்தாலும் அந்த நினைவு எழுந்த நேரந் தொட்டே துன்பங்களே தொடரும், இடரும், படரும். ஆகவேதான் எல்லாப் பாவங்களுக்கும் சிகரமாக இருப்பது பெண் பாவம். அதனால்தான் பெண்ணைச் சேர்வது மலையளவு பாவம் என்பதைக் குறிக்க வள்ளுவர் இங்கு அறன் வரையான் பிறன் வரையான் என்ற இடங்களில் வரை வரை என்று சொற்களைப் பெய்திருக்கிறார். மலையளவு பாவம், மலையளவு மாட்சிமை மிக்க பெண்மை, மலையளவு அமைதி, மலையளவு நன்மை என்று கூறிய வள்ளுவர் மன அமைதியும், வாழ்வில் மிகுதியும் பெற பிறனுக்குரிய உடமைகளை நினைக்காதீர் என்று அழகுபட ஆணித்தரமாகக் கூறுகிறார்.