பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 209 விளக்கம்: ஒருவர் தீமை செய்கிறார் என்றால், அவர் தெரிந்தே தான் செய்கிறார். தெரிந்து செய்யும் குற்றத்தை மன்னித்து விடுகிறபோது அந்த வடு மாறிவிடாது. அது எப்பொழுதும் உள் மனத்திலே தொந்தரவை அதிகப்படுத்தி விடுகிற ஆற்றலுடனே இருக்கும். அந்தத் தீமையை அசட்டை பண்ணுவதன் மூலமாக மனத்திலிருந்து, நினைவுகளில் இருந்து விட்டு விடுவதும் விரட்டி விடுவதும், மனத்தில் இருந்தே கிள்ளி எறிந்து விடுவதும், உயர்ந்த பண்பாற்றல் மட்டுமல்ல அது உயர்ந்த சுகத்தை அளிக்கும். ஒப்பற்ற சொர்க்க வாழ்வைப் படைக்கும். வாழ்வில் எல்லாம் எல்லாச் சிறப்பினையும் கொடுக்கும் என்று பொறையின் பெருங்கொடையை இரண்டாவது குறளில் கூறுகின்றார். 153. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை பொருள் விளக்கம்: இன்மையுள் வன்மை = வறுமையிலும் வலிமையானது. விருந்தொரால் = புதியவர்களுக்கு ஈகுதல்தான் வன்மையுள் வன்மை - பலம் உள்ள மெய்யிலும் வலிமையானது (பொறுமை காக்கும்) மடவார்பொறை - மகளிர், பூமியை விட பொறை காக்கும் பண்பே சிறந்ததாகும். சொல் விளக்கம்: இன்மை = இல்லாமை, வறுமை, இல்லா மெய், பலமின்மை; வன்மை = வலிமை; விருந்து - புதுமை, புதியவர் ஒரால் = ஈகுகை மடவார் = மகளிர், அறியாமை; பொறை - பூமி: பொறுமை முற்கால உரை: வறுமையுள் வறுமையாவது விருந்தினரை நீக்குதலாகும். வல்லமையுள் வல்லமையாவது அறியாது தீங்கு செய்தவரைப் பொறுத்தலாகும். தற்கால உரை: விருந்தினரை விரட்டுவதே வறுமை. அதுபோல் வன்மையுள் வன்மை கீழோர் துயர் பொறுத்தல் ஆகும்.