பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/249

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


248 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா செயல், அவளையே முதலில் இழிவு படுத்தி அழிவுக்கு ஆளாக்கிவிடும். பிறகுதான் மற்றவர்களைப் பாதிக்கும். வேதிக்கும். ஆற்றும் அல்லல் செயல்களில் தூற்றும் தொழிலே, தொல்லைகளை விளைவிக்கும் என்பதால், இனிதாக நன்மை பயப்பது, நம்பிக்கையுடன் கூறிய மறைகளை குறையாக்கித் தூற்றுதல் பாதகச் செயல் என்று இந்தக் குறளில் தெளிவாக்கிக் கூறுகிறார். 182. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை பொருள் விளக்கம்: புறம் அழி + இ = பழிச்சொல்லால் ஆச்சரியமான முறையில் அழித்திட பொய்த்து - வஞ்சகமனமான வக்ரத்துடன் நகை = விளையாட்டாகக் கருதிச் செய்கிற காரியமானது அறனழீஇ = அறத்தை அழிக்கும் செயலைவிட (அநியாயமாக) அல்லவை செய்தலின் - பாவச் செயல் செய்வதைவிட தீதே = கொலைக்கும் மேலான கொடுமையாகும். சொல் விளக்கம்: பொய் - வக்கிரம், வஞ்சகம், நகை = விளையாட்டு புறன் = பழிச்சொல், இ = ஆச்சரியம்; தீது = மரணம், கொடுமை, பாபச் செயல் முற்கால உரை: ஒருவரைக் காணாதவிடத்து இகழ்ந்து, கண்டவிடத்துப் புகழ்ந்து பேசுதல் பாவத்தைச் செய்தலினும் கொடியதாகும். தற்கால உரை: புறத்தில் இழித்துக் கூறி, அவன் முன்னே பொய்த்து நகையாடல், அறங்களை அழித்து மறங்களைச் செய்தலினும் தீதே. புதிய உரை: பழிச் சொல்லால் துற்றுவதை வஞ்சக நெஞ்சுடன் வியக்கத்தக்க முறையில் செய்வதானது, அநியாயமாக அறங்களை அழித்துச் செய்யும் பாவங்கள் மற்றும் கொலை செய்வதைவிட மேலான கொடுமையான பாவமாகும்.