பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/275

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


274 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா நன்மை செய்கிற நல்வினையை, உதவுகிற உபகாரத்தைப், பீடுநிறைந்த பெருமையை, மேம்பாடு மிகுந்த வாழ்வு நிலையைக் குறிக்கவே நன்று என்ற சொல்லை இங்கே படைத்திருக்கிறார். அவர் பெருமை நிலைக்க, பயனில சொல்லாமையே நன்று என்பதால், மன அடக்கம் வேண்டும் என்பது போலவே, வாயடக்கமும் வேண்டும் என்னும் கருத்தை, வள்ளுவர் வலியுறுத்திக் கூறுகிறார். பிறருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த மட்டும் பேச்சு உதவவில்லை. தன்னை வளப் படுத்தவும், நிலைப்படுத்திக் கொள்ளவும் வழிகாட்டுகிறது என்பதால், நல்லவை பேசா விட்டாலும் பரவாயில்லை. அல்லவை பேசாமல் இருந்தால், அதுவே அருமையான வாழ்வை அளிக்கும் என்று ஏழாவது குறளில், எடுத்துக் காட்டுகிறார். 198. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். பொருள் விளக்கம்: அரும்பயன் = அரிதின் கிடைக்கின்ற புகழ், கல்வி, வலிமை, வெற்றி போன்றவற்றை. ஆயும் நுட்பமாய் நுணுகிப் பார்க்கும் அறிவினார் = பொறி உயர்வு நிறைந்த ஞானம் உள்ளவர் பெரும் பயன் இல்லாத மிகுபேறு தருகின்ற மேன்மைமிகு வாழ்வை வழங்காத. சொல் சொல்லார் = பொருளற்ற சொற்களைப் பேசவே மாட்டார். சொல் விளக்கம்: அரும் - அரிய, எளிதில் கிடைக்காத; பெரும்பயன் = மிகுபேறு பேறு வாய்ப்பு, புகழ், கல்வி, வலிமை, வெற்றி, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள். முற்கால உரை: அறிதற்கரிய பயன்களை ஆராயவல்ல அறிவினை உடையார் மிக்க பயனுடைய வல்லாத சொற்களைச் சொல்லார். தற்கால உரை: அரிய பயன்களை ஆராயும் அறிவினர். கேட்பவர்க்குப் பெரும் பயன் அறியாத சொற்களை ஒருபோதும் சொல்லார்.