பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/281

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


280 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 21. தீவினை அச்சம் மனிதருக்கு முதலில் தோன்றுவது எண்ணம். அடுத்து வெளிவருவது சொல். அதனைத் தொடர்வது செயல். புறங்கூறுகிற எண்ணம் புறப்பட, அது போர்ப் படைபோலப் பயனில சொல்லிவிட, அதன் விரிவாக விளைவதுதான் செயல். நடந்து முடிந்து, பின் நிகழ்ந்த சுவடு தெரியாமல் மறைந்து போவது செயல். நிகழ்ந்த செயல், தொடர்வதும், தொடர்ந்து ஒருவித பலனைத் தந்து கொண்டேயிருப்பதும்தான் வினை ஆகிறது. செயலின் முதிர்ந்த நிலைதான் வினை. செய்கிற தன்மைக்கேற்ப, அந்த வினை இரண்டாகப் பிரிகிறது. தனக்கும் பிறருக்கும் நன்மை செய்கிற வினை நல் வினை என்றும்; தனக்கும் பிறருக்கும் தீமைகளை விளைவிக்கிற வினை தீவினை என்றும் அழைக்கப்படுகிறது. நல் வினையோ, தீவினையோ, இரண்டில் எதுவாக இருந்தாலும், அது அழிந்து போகாமல், முதிர்ந்து போய், பழமை ஆனாலும், அதனைச் சார்ந்து வெளிப்படுகிற முடிவுக்கு ஊழ்வினை என்று பெயர். தீவினை பற்றி 21 ஆம் அதிகாரத்தில் கூறுகிற வள்ளுவர், ஒழுக்கம் பற்றிக் கூறுகிற அறத்துப்பாலின் கடைசி அதிகாரமாக 38ஆம் அதிகாரத்தை ஊழ் பற்றிய அதிகாரமாக வைத்து, விளக்குகிறார். தீ வினை அச்சம் என்று நாம் பிரித்துப் பார்க்கிறோம். தீ என்றால் நெருப்பு என்றும், தீமை என்றும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் தீ என்றால், அறிவு என்றும், தந்திர வழி என்றும் , சேர்ந்தாரைக் கொல்லி என்றும் பல சுவையான பொருட்கள் உண்டு. ஒருவர் செய்கிற ஆகாத அழிவுச் செயல் எல்லோமே தீ செயல்தான். அந்தத் தீமை பயக்கும் தொடர் செயல் தான் தீவினை ஆகிறது. வேண்டாத விளைவுகள் நிகழத் தூண்டி விடுவது தீவினை. தீவினை என்று சொல்லாமல், தீவினை அச்சம் என்று மேலும் ஒரு சொல்லைச் சேர்த்திருக்கிறார். தீவினை என்றாலே