பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/283

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


282 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 201. தீவினையார் அஞ்சார் விழுமியர் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு பொருள் விளக்கம்: தீவினை என்னும் = தீமை பயக்கும் நச்சுச் செயல்கள் என்பவை, செருக்கு - அவைதான், தனது வாழ்வென்று எண்ணிக்களிக்கிற தீவினையார் = சூழ்ச்சிமிக்க வஞ்சனையாளர் அஞ்சார் - (தொடர்ந்து செய்ய, பயப்பட மாட்டார்) விழுமியர் = தீவினை ஆற்றியதால் துன்பம் அடைந்தவரும், தீ செயலுக்கு அப்பாற்பட்ட சீர்மையாளராம். அஞ்சுவர் = சூழ்ச்சியாளர், வஞ்சனையாளர். விழுமம் = இடும்பை, துன்பம், சிறப்பு, சீர்மை. செருக்கு = களிப்பு, இறுமாப்பு, ஆணவம், மனோராச்சியம், செல்வம், வாழ்க்கை. சொல் விளக்கம்: தீவினை = தீமைபயக்கும் நச்சுச் செயல்கள் விழுமியார் = தீவினையால், துன்பமடைந்தவர், அப்பாற்பட்டவர். முற்கால உரை: தீயனை என்று சொல்லப்படும் மயக்கத்தை, முன் செய்த தீவினை உடையவர் அஞ்சார் அஃதிலராகிய சீரியோர் அஞ்சுவார். தற்கால உரை: தீய செயல் என்று சொல்லப்படும் இறுமாப்பை உடைய, அத்தீய செயல்கள், பழகிப் போன கொடியவர் அஞ்சமாட்டார். ஆனால் அருளொழுக்கம் உடைய சிறந்தோர் அஞ்சுவர். புதிய உரை: - தீமை பயக்கும் நச்சு செயல்களே, தமது வாழ்க்கை என்று எண்ணிக்களிக்கும் சூழ்ச்சிமிக்க வஞ்சனையாளர்கள், தீவினை செய்யப் பயப்படமாட்டார்கள். ஆனால் தீச் செயல் செய்வதன் காரணமாகத துனபப பட டவாக ளும , துய பணபாளாக ளு ம தீவினையை செய்திட பயப்படுவார்கள். விளக்கம்: தீமையினும் கொடியது தீ. தீயினும் கொடியது தீமை. இந்த இரண்டிலும் ஈடுபடுகின்ற ஒருவரை வினையார் என்கிறார் வள்ளுவர். தீய செயலை செய்வதற்கு முன் எண்ணுகிற எண்ணத்தில் அவர்கள் சூழ்ச்சி மிக்கவர்களாக மாறிவிடுகிறார்கள். எண்ணியதைச் செயல்படுத்துகிறபோது, அவர்கள் வஞ்சகர் களாகவே உருமாறி விடுகின்றார்கள்.