பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தற்கால உரை: ஒப்புரவு போன்ற மற்றை நல்ல செயல்களைத், தெய்வ உலகத்தும் இவ்வுலகத்தும் பெறல் அரிது. புதிய உரை: புதுமைகளை விரும்பும் உயர்ந்த மக்களிடத்தும் கிடைக்காத சமம், சமாதானம், ஒற்றுமை போன்ற நன்மைகள், ஒப்புரவு மூலம் நிறையவே கிடைக்கிறது. விளக்கம்: புத்தேள் என்றால் தெய்வம் என்று ஒரு பொருள். புதுமை என்றும் ஒரு பொருள். பரிமேலழகர், மற்றும் அவரைப் பின்பற்றி உரை எழுதிய உரையாசிரியர்கள் எல்லோரும், தேவருலகம், தெய்வ உலகம் என்று பொருள் கூறினர். டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன், புகழ் உலகம், அதாவது வான் புகழ் கொண்டோரின் புகழ் உலகம் என்று பொருள் கூறுகிறார். புத் தேள் என்றால் புதுமை என்றும், உலகத்து என்றால் உயர்ந்தோர், மக்கள், சான்றோர், நிலம், பூமி என்றும் உள்ள பொருட்களைக் கொண்டு, புதுமை விரும்புகிற சான்றோர்கள், உயர்ந்த மக்கள் என்று பொருள் கண்டிருக்கிறேன். அறிவுள்ள நான்கு பேர் ஒன்று சேர்ந்தாலே, அங்கே குழப்பம், புகைச்சல், பகை, சச்சரவு தோன்றும் என்பார்கள். அனுபவமுள்ளவர்கள். அதனால்தான், வள்ளுவர் மிக சாமர்த்தியமாக, ஒப்புரவின் நன்மைகளாக விளங்குகிற, சமம், ஒற்றுமை, சமாதானம் உதவி போன்றவை புதுமை மனத்தாரிடம் நிறைய கிடைக்காது. ஒப்புரவில் ஒப்புதல் கொண்ட உள்ளத்தில்தான் நிறைய கிடைக்கும் என்கிறார். இரண்டாம் குறளில், ஒப்புரவான பிறர்க்குத் தேவை அறிந்து செய்கிற உதவியை, உடலால் நிறைவேற்ற வேண்டும். அரிய செயலாற்றுகின்ற ஆண்மை, வல்லமை உள்ள உடலில்தான் நிறைய வாழும் என்றவர், மூன்றாவது குறளில், மக்கள் உயர்ந்தோராக இருக்கலாம்; சான்றோராகத் திகழலாம்; ஒழுக்கத்தில் நிறைந்தோராக வாழலாம் என்கிறார்.