பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/313

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


312 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா இரக்கம் மிகுந்த வாழ்க்கையின் அகக் கண்ணும் , புறக்கண்ணும், பொலிவான உடம்பையும், தெளிவான அறிவையும், நிறைவான ஞானத்தையும் கொண்டிருக்கும் என்னும் உண்மை நிலைக்கு பழம் என்பதை உவமித்துக் காட்டினார். மரம் என்பது ஒப்புரவாளன் உடல். பழம் என்பது ஒப்புரவாளனின் கருணை மிகுந்த கொடைகள். வாழ்க்கை என்ற ஊரிலே நடுநாயகமாக நடமாடுகின்ற உடலும், அதனுள்ளே பழுத்த அன்புச் சிந்தனைகளும், இன்ப செயல் முறைகளும், யாவர்க்கும் சொந்தமாகி, சுகமாகி மிளிர்கின்றன. அதனால்தான் பயன்படுமரம் - நயன்படு வாழ்க்கைவயப்படும் மக்கள் சுகப்படும் உறவுகள் எல்லாவற்றையும் எழிலோவியமாக இந்த ஆறாவது குறளில் கூறியிருக்கிறார். 217. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் பொருள் விளக்கம்: பெருந்தகையான் = பெருமைக் குரியவன் செல்வம் கண்படின் வாழ்க்கையின், இரக்கப்படும் கொடையால் உதவுவது; மரத்தற்றால் = வானத்திலிருந்து வருகிற மருந்தாகி - (அகமும் புறமும் மகிழ்விக்கும்) அமுதம் போல தப்பா - என்றும் தப்பாது உதவும் சொல் விளக்கம்: பெருந்தகை - பெருமைக்குரியவன்; பெருமை = வல்லமை, வீறு, விறல், மாட்சிமை, கீர்த்தி, சீர்மை மருந்து அமுதம்; மரம் = வானம் முற்கால உரை: செல்வம் ஒப்புரவு செய்யும் பெரிய தகைமையை உடையான் கண்ணே படுமாயின். அஃது எல்லா உறுப்பும் பிணிகட்கு மருந்தாய் தப்பாத மரத்தை ஒக்கும். தற்கால உரை: ஒப்புரவாளனின் மிகுந்த செல்வம், ஒரு நல்ல மாத்தின் எல்லாப் பகுதிகளும் மக்களுக்கு மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும் (கா)