பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/317

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


o 16 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 219. நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர செய்யாது அமைகலா ஆறு. பொருள் விளக்கம்: நயனுடையான் = இரக்கமும் உதவும் குணமும் கொண்ட உபகாரன் நல்கூர்ந்தான் = வறுமெய்யால் வதங்கிப் போனாலும் ஆதல்செயும் நீர உதவி செய்யக் கூடிய ஒப்புரவு குணம் செய்யாது = உதவி செய்யவிடாமல் அமைகலா ஆறு = எந்த இடையூறையும் நிகழ்த்தாது. (உதவும்) சொல் விளக்கம்: நயனுடையான் = கொடைமனம் கொண்டவன் நல்கூர்ந்தான் = வறுமையாளன் நீர் = குணம்; ஆறு - பயன் ஒழுக்கம்; கலா = கலகம் முற்கால உரை: ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தானாதலாவது, தவிராது செய்யும் நீர்மையை உடைய அவ்வொப்புரவுகளைச் செய்யப் பெறாது வருந்துகின்றது இயல்பாம். தற்கால உரை: உலக நலங் கருதிய நல்லோன், வறுமை உடையவன் ஆவது, அவன் செய்ய விரும்பிய உதவிகளைச் செய்ய முடியாமல் வருந்துகின்ற தன்மையே ஆகும். புதிய உரை: ஒப்புரவாளன், தான் உடல் வறுமையால் வருந்து கிறபோதும், செய்கிற உபகாரங்களைச் செய்யாமல் நிறுத்திவிடுகிற இடையூறுகளுக்குப் பயன் கிடைக்காமல் செய்தும் காப்பான். விளக்கம்: நல்கூர்ந்தான் என்னும் ஒரு சிறந்த சொல்லை, வள்ளுவர் இங்கே கையாண்டிருக்கிறார். நல் என்றால் நல்ல என்றும், கூர்தல் என்றால் ஆராய்தல், விருப்பம் கொள்ளுதல் என்றும் அர்த்தம். நல்கூர்ந்தான் என்றால் நல்லனவற்றில் அவன் நாட்டம் நிறைந்தவனாக, துண்மையான ஆய்வு மதி கொண்டவனாக (ஆதல் என்றால் விருத்தியடைதல்) வளர்ச்சிப் பண்புள்ளவனாக என்றும் நாம் பொருள் கொள்ள இடம் உண்டு.