பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை mm= 34. அறமாவது ஒழுக்கம். அது இல்லறத்தில் நிறைய உண்டு. துறவறத்தில், இன்னும் திண்மையாக உண்டு. எந்த ஒழுக்கத்திலும், எதிரில் உள்ளவர்களுக்கு இன்பம் பயக்கும் வண்ணம் உதவுவதும், உபகாரம் செய்வதும் தான் மனித நேயத்தின் பெருமை. அப்படிப்பட்ட பெருமைக்கு நிலைக்களமாக, கலைப் பீடமாக, காக்கும் தலமாக, கடமையாற்றும் நிலமாக உள்ளது தான் புகழ் ஆகும். அந்தப் புகழுக்குரியவர்களாக ஆக வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு அடிப்படைக் குணங்கள் எப்படி எல்லாம் இருந்தால், சிறப்பைத் தரும், செழிப்பைத் தரும், உவப்பைத் தரும், உலகத்தில் நிலைப்பைத் தரும் என்று வள்ளுவர், மிகத் துல்லியமாக அடுக்கித் தருகின்றார். எல்லோரிடமும் இசைந்து போகும் பண்பால், இசையெனும் புகழ் சேர்கிறது என்று, ஏற்படும் வழிகளைச் சுகவழியாகச் சொல்லித் தருகிறார் வள்ளுவப் பெருந்தகை. T.