பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/345

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


344 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சொல் விளக்கம்: உரை - முழக்கம்; உரைப்பவை - விரித்துரைக்கும் மெய்யுரை ஒன்று ஒரு முகப்படு; மேல் = சரீரம்: நிற்கும் = நிலையாகத் தங்கும் புகழ் = அருஞ்செயல். முற்கால உரை: உலகத்து ஒன்றுரைப்பார் உரைப்பன வெல்லாம், வறுமையுள் இரப்பார்க்கு அவர் வேண்டிய தொன்றை ஈவார் கண் நிற்கும் புகழாம். W தற்கால உரை: உரையாலும் பாட்டாலும் சொல்லுவார் சொல்லுவன எல்லாம், இல்லை என்று கேட்டு வருவார்க்கு, வேண்டும் ஒன்றைக் கொடுப்பவர் பேரில் நிற்கிற புகழ்களே ஆகும். புதிய உரை: இரப் பார்க்கு, ஒருமுகத்தோடு, உயர்ந்த பொருளைக் கொடுப்பவரின் உடம்பில், அருஞ்செயல்கள் நிலைத்து நின்று, புகழை முழக்கமிடும். அதுவே விரித்துரைக்கும் மெய்யுரையும் ஆகும. விளக்கம்: உரைப்பார் உரைப்பவை எல்லாம் என்றார் வள்ளுவர் . 9_ ᎶᎡ) $ மக்களிடையே உயர்ந்தனவற்றைப் பேசுகின்ற சான்றோர்களின் சொற்கள், உண்மையை வெளிப்படுத்துகிற முழக்கமாகவே இருக்கும். அதைத்தான் உரைப்பார் என்றார். உரைத்தலில் உண்மையும், உறுதியும் உலக நடையும் வேண்டும் என்பதால், அதை உரைப்பவை என்றார். அதாவது உண்மை உறுதி ஒழுக்கத்தை விரித்துரைக்கும் மெய்யுரை என்றார். அப்படிப் பட்ட ஆற்றல் எல்லாம், ஒருவருக்கு ஒருமுகத்தோடு கொடுக்கிறபோதுதான் நலம் தரும். வளம் தரும். ஒருமுகம் என்றால், நேர்வழியாய் போகிற நினைவும் செயலும் என்று நாம் பொருள் கொள்ளலாம். மனம் வெறுத்து, உடல் பணிந்து தருவதும் ஈதல்தான். மனம் விரும்பி, உடல் நிமிர்த்தி ஆணவமாக அளிப்பதும் கொடைதான். ஆனால் இங்கே வள்ளுவர் கூறும் முறை - ஒன்று ஈவார். உடலும் மனமும் ஒன்றாகி, உருகித் தருபவர்.