பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/376

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 375 வேட்கையுடன் 6 வது குறளில் பாடிய அவர் ஏழாவது குறளில், பொருளில்லார்க்கு இவ்வுலகமே இல்லை என்று ஆணித்தரமாகத் தொடர்ந்து பாடியிருக்கிறார். 247. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி ஆங்கு. பொருள் விளக்கம்: அருள் இல்லார்க்கு = கருணையும் நல்வினையும் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை - அறிவுள்ளோர் அவையில் இடம் இல்லை. பொருளில்லார்க்கு நல்ல உடல் இல்லாதவர்களுக்கு இவ்வுலகில் = வாழ்கிற இந்த உலகில் ஆங்கு = அந்தப் பொழுதிலிருந்தே இல்லாகி = மரணம் தொடங்கி விடுகிறது. சொல் விளக்கம்: அருள் = கருணை, நல்வினை; அவ் = அவை, அறிவுளோர் சபை பொருள் - உடம்பு; இல் = மரணம், சாவு ஆங்கு - அப்படியே, அந்தப் பொழுதே முற்கால உரை: உயிர்கண் மேல் அருளில் லாதார்க்கு வீட்டுலகத்தின் பமில்லை. பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகத்தின்பம் இல்லையாகும். தற்கால உரை: பொருளில்லார்க்கு இவ்வுலகில் வாழ்ந்தாலும். அவருக்கு உலகியற் பேறு இல்லை. அதுபோல, அருளில்லாதவர் புகழ் உலகில் புகுந்தாலும், அவர்க்குப் புகழ்ப் பேறு இல்லை. புதிய உரை: அன்பும் அறமும் இல்லாதவர்களுக்கு அறிவுள்ளோர் சபையில் இடம் இல்லை. நல்ல உடல் இல்லாதவர்க்கு, இந்த உலகில் மரண அவதிகள், அப்போதிருந்தே தொடங்கி, வாழ்வில்லாமல் ஆக்கிவிடும். விளக்கம்: பொருள் இல்லார்க்கு இவ்வுலக இன்பமில்லை; உலகியற் பேறு இல்லை என்று பொருள் கொண்டிருக்கின்றனர்.