பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா இல்லறத்தாருக்கு இந்தக் கருத்தை ஏற்க முடியும். ஏற்பவர்கள் ஏற்கட்டும். இயலாதவர்கள் தொடரட்டும். ஆனால், துறவறம் பூணுகிற தூய நெஞ்சினரால், புலாலை மறுக்க முடியும், வெறுக்க முடியும், ஒதுக்க முடியும் என்று எண்ணி அருளுடைமை வேண்டுவோருக்குப் புலால் உணவு வேண்டாமே என்று, அடுத்த அதிகாரமாக வைத்திருக்கிறார். புலால் மறுத்தல் என்பதில், மறுத்தல் எனும் சொல்லுக்குச் சில வித்தியாசமான அர்த்தங்களும் உள்ளன. மறுத்தல் என்றால் தவறு, கோடாமை, ந ாணுதல். புலால் உண்ணுவது தவறு என்று சொல்வது முதல் நிலை. புலால் உணவைப் பிறருக்குக் கொடுக்காமல் இருத்தலும் தவிர்த்தலும் இரண்டாம் நிலை. புலால் உணவை எண்ணுவதும், உண்பதும் வெட்கக் கேடான செயல் என்று நாணி, அடியோடு வெறுத்து ஒதுக்குவது மூன்றாவது நிலை. துறவறம் பூண்டோருக்குத் தொல்லைப்படுத்துவது இந்த உணவு முறையென்றாலும், வைராக்யத்துடன் வாழ்ந்திட வேண்டும் என்று வரம் பெற்ற வாழ்க்கையல்லவா துறவறம், ஆகவே, நாவடக்கம் வேண்டும், அதனால் மன அடக்கம் வரும் என்ற நல்ல கொள்கையாக, அருளுடைமை அதிகாரத்தைத் தொடர்ந்து வைத்துள்ளார்.