பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/392

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 391 ஊன் தினல் = ஊனைத் தின்பது அல்லது = கேடு மிகுந்த தீவினையாகும். யாது - அவர் (மனிதரல்லர்) அரக்கராவார் சொல் விளக்கம்: அல்லது = தீவினை; கேடு; யாது - அரக்கர், ஊன்தின்பவர் கொல்லாமை = கொல்லா மெய்; கோறல் = சொல்லுதல் தவ் = தன்னிலை பிறழ்ந்து; அல்ல - இன்மை எனின் = என்று சொல்லல் முற்கால உரை: அருள் யாதெனில் கொல்லாமை. அருளல்லது யாதெனில், கோறல். அக்கோறலான் வந்த ஊனத்ை தின்கை பாவம். தற்கால உரை: அருள் யாது என்றால் அது கொல்லாமை. அருள் அல்லாதது யாது என்றால் அது கொல்லுதல். ஆதலால், அக்கொலையால் வந்த புலாலைத் தின்னல் சிறந்த பொருள் அன்று. புதிய உரை: எவ்வுயிரையும் கொல்லாத மெய்தான் சிறந்த அருள் பொதிந்த உடலாகும். (பொருள்) அவ்வாறின்றி, பிற உயிரைக் கொன்று, தன் நிலை பிறழ்ந்து, அந்த ஊனைத் தின்பவர் மனிதரல்லர்; அரக்கராவர். விளக்கம்: பிற உயிர்களைக் கொல்லுகிற மெய், கொல்லாதமெய் என்று இரண்டு வகை மெய்களைக் காட்டுகிறார் வள்ளுவர். பிற உயிரைக் கொல்லாதமெய் - பொருள் பொதிந்தது. அருள் நிறைந்தது. அதைக் கொல்லாமை பொருள் அருள் எனக் குறிக்கின்றார். அல்லது அதாவது தீவினை செய்து; கோறல் எனும் பிற உயிரைக் கொன்று, தவ் என்னும் தன்னிலையில் மாறி வந்து, ஊன் தின்பது யாராக இருக்கக் கூடும்? அவர் மனிதராக நிச்சயம் இருக்க முடியாது. அப்படிப்பட்டவர் அரக்கர் என்றே அழைக்கப்படுவார் என்று உறுதிபட வள்ளுவர் உரைக்கின்றார். யாது என்ற சொல்லுக்கு ஊன்தின்பவர் என்பது பொருள். ஊன் தின்பவரை அரக்கர் என்று அழைப்பதும் மரபுதான். யாது என்பதற்கு அரக்கர் என்றும் ஒர் அர்த்தம் உண்டு.