பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 401 பிற்காலத்திலும், தற்காலத்திலும் உரை எழுதிய ஆசிரியர்கள் எல்லோரும் நெய் சொரிந்து வேள்வி என்றே தொடர்ந்து எழுதினர். எங்கோ வசதியுள்ள சிலர், தங்கள் பாவங்களையும் மீறிப் பலன்கள் பெற வேண்டும் என்பதற்காக, பக்தியற்ற பிரார்த்தனைகளே இன்று யாகம் என்னும் பெயரில் நடந்து வருகிறது. ஆனால் அவி என்றால் உணவு நீர், தேவர் உணவு என்று பொருள்கள் உண்டு. சொரிந்து என்றால் அதிகமாகக் கொடுப்பது. இல்லை என்னாமல் ஈதல் என்று பல பொருள்கள் உண்டு. இவ்வாறு ஆயிரமாயிரம் பேர்களுக்கு உண்டி அளித்து, உயிர் காத்து, உதவுவதற்கு விரும் புவதிலும், என்று அங்கே நிறுத்துகிறார். ஆயிரம் மனித உயிர்களுக்கு அன்ன ஆகாரம் தந்து உதவுவதைவிட, அங்கே ஒரு விலங்கைக் கொன்று உண்ணாமல் இருப்பது என்பது உயர்ந்தோருக்கான காரியம் என்று கூறுகிறார். நன்று என்ற சொல்லுக்குச் சுகம் என்றும், இன்பம் என்றும், வாழ்வின் ஆக்கம் என்றும் கூறலாம். ஒருயிரைக் கொல்லாமல் இருப்பதும், அதன் உடல் தசைகளை உண்ணாமல் இருப்பதும், மனத்துக்கு இன்பம். உடலுக்குச் சுகம் வாழ்வுக்கு ஆக்கம் என்கிறார் வள்ளுவர். செகுத்து என்பதானது கொஞ்சங் கொஞ்சமாகக் கொல்லுகிற கொடுரம். அப்படி உயிரை அழிக்காது காப்பது, அன்னதானம். ஆயிரம் பேர்களுக்கு அளித்துக் காப்பதை விட சிறந்தது என்று புலால் மறுத்தலின் புனிதத்தை ஒன்பதாம் குறளில் நம்பகமாக விளக்குகிறார். 260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும். பொருள் விளக்கம்: கொல்லான் = பிற உயிர்களைக் கொல்லாதவனை, புலாலை = விலங்குகளின் தசைகளை o மறுத்தானை - தவறென நாணி வெறுத்து ஒதுக்கியவனை கைகூப்பி - அவரது ஒழுக்கத்திற்காக, கரம் குவித்து எல்லா உயிரும் = மனிதன், விலங்குகள் உட்பட எல்லா ஆத்மாக்களும் தொழும் வணங்கும்.