பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 259. அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று. பொருள் விளக்கம்: அவிசொரிந்து = உயிர்காக்கும் உணவு, நீர் போன்றவற்றை அதிகமாக ஈந்து. ஆயிரம் வேட்டலின் = ஆயிரமாயிரம் கொடைகளைத் தர விரும்புதலைவிட, ஒன்றன் = ஒருயிரின் (ஒரு மிருகத்தின்) உயிர்செகுத்து = அழித்துக் கொன்று உண்ணாமை நன்று = உண்ணாமல் இருப்பதே வாழ்வுக்கு ஆக்கம் தரும். - சொல் விளக்கம்: அவி = உணவு, சோறு, நீர், காற்று சொரிந்து = அதிகமாகத் தந்து, ஈந்து; வேட்டல் = விரும்புதல் செகுத்து = அழித்து, கொன்று நன்று = சுகம், இன்பம், வாழ்வின் ஆக்கம் முற்கால உரை: தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒரு விலங்கின் உயிரைப் போக்கி, அது நின்ற ஊனை உண்ணாமை நன்று. தற்கால உரை: நெய் குருதி போன்றவற்றைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்வதைவிட, ஒர் உயிரைக் கொன்று, அதன் உடலை உண்ணாதிருப்பது உயர்ந்தது. புதிய உரை: உயிர்காக்கும் உணவு நீர் போன்றவற்றை அதிகமாக ஈந்து, ஆயிரமாயிரம் கொடைகள் செய்வதில் விருப்பம் கொள்வதைவிட, ஒரு விலங்கின் உயிரைக் கொன்று, அதன் உடலை உண்ணாதிருப்பது, வாழ்வுக்குச் சுகம் மட்டுமன்று. ஆக்கத்தையும் தரும். விளக்கம்: அவி சொரிந்து என்றதும், ஆதி நாட்களில், வேள்விகள் செய்து, விரும்பி, அவற்றை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டதைப் பரிமேலழகர், இந்தக் குறளுக்கு இப்படி உரையெழுதினார். தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து என்று எழுதினார்.