பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.32 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா புதிய உரை: தவ வேடத்தில் (வடிவம் மாற்றி ) மறைந்து கொண்டு, தீயவைகளைச் செய்கிறவன், ஞானிகள் பின்னே மறைந்து நின்று, மதுபானம் குடிக்கிற அறிவிலி கண் மூடிக் கிடப்பது போலாகும். விளக்கம்: புள் என்றால் பறவை என்றும், சிமிழ்த்தல் என்றால் பிடித்தல் என்றும் வேட்டுவன் என்றால், வேடன் என்றும் பொருள்கள் உண்டு. இவையெல்லாம், இயற்கையாக, படித்த உடனே ஏற்படும் அர்த்தங்கள் தாம். ஆனால், கொஞ்சம் ஆழமாக ஆய்ந்து பார்க்கிறபோது, கிடைக்கிற அர்த்தங்கள், வித்தியாசமானதாகவும், விவரம் நிறைந்ததாகவும் இருக்கின்றன. புள் என்றால் மதுபானம். அதாவது கள் குடிக்கை. வேட்டுவன் என்றால் கொலையாளி. சிமிழ்த்தல் என்றால் கண்மூடல். அதாவது கண்டும் காணாததுபோல நடந்து கொள்ளுதல். அப்படி நடந்து கொள்பவனைக் கண்மூடி என்பர். அதாவது அறிவிலி, குருடன், கவனமில்லாதவன். இப்பொழுது கிடைத்திருக்கிற புதிய அர்த்தங்களுடன், குறளை மீண்டும் படிக்கிறோம். தவ வேடம் என்பது ஞானிகள் போல. தவம் மறைந்து என்பது ஞானிகள் பின்னே மறைந்து கொள்ளுதல். தீயவை செய்தல் என்பது தீயவைகளுக்கெல்லாம் மூலகாரணமாக விளங்கும் கள் குடிக்கை. தவ வேடம் மற்றவர்கள் கண்களை எப்படி மறைக்கிறதோ, அதுபோலவே, கொலையாளியாகிற ஒருவன், ஞானிகள் பின்னே கள்ளுடன் நிற்கிறபோது அவனும் காக்கப்படுகிறான். அவன் இருக்கும் சூழ்நிலை அவனை மறைத்துக் காக்கிறது. இருந்தாலும் தவ வேடம், அவச் செயல்களில் கலைவது போல, குடிகாரனும் தனது போதை மூலமாக வெளிப்படுத்தி, அழிகிறான். தவ வேடம் தற்காலிகமான பாதுகாப்பு போலவே, ஞானிகள் பின்னே கள்ளுடன் இருப்பது, சிறிது நேரம்தான்.