பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 4.3.3 ஆகவே, ஞானமிலார் தவ வேடமாகிய சடை, சிகை, பூணுல், திருநீறு எல்லாம் போட்டு வேடமிட்டு வெளி வந்தாலும் அவர்கள் மூடுதல் இன்றி முடியும் மனிதர்களாகி வீழ்கின்றனர். நிரந்தரப் பாதுகாப்பு என்பது வேட்கை விட்டார் நெஞ்சில் தான் நிலைத்து நிற்கும் என்று 4 வது குறளில் கூறுகின்றார். 275. பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றன்று ஏதம் பலவும் தரும் பொருள் விளக்கம்: பற்றற்றேம் என்பார் = உலகில் சுக துக்கம் போன்ற எந்தப் பற்றும் இல்லை என்று படிற்றொழுக்கம் = கூறுகிற பொய்த்துறவியின் பொய்யான ஒழுக்கம், எற்று எற்று என்று குத்து, வெட்டு, கொல்லு என்று ஏதம் பலவும் தரும் - (தெரிந்து கொண்ட) மக்களால் கொடுமையான துன்பங்கள் எல்லாம் உண்டாக்கும் சொல் விளக்கம்: பற்று - அன்பு, ஆசை, உணவு, செல்வம், இல்வாழ்க்கை படிற்று = பொய், களவு, ஏற்று குத்து, சொல்லு, புடை, வெட்டு, இரங்கு; ஏதம் = துன்பம், கேடு. முற்கால உரை: தம்மைப் பிறர் நன்கு மதித்தற் பொருட்டு யாம் பற்றற்றேம் என்று சொல் வாரது மறைந்த ஒழுக்கம், அப்பொழுது இனிது போலத் தோன்றுமாயினும், என்செய்தோம், என்செய்தோம் என்று தாமே இரங்கும் வகை, அவர்க்குப் பல துன்பங்களையும் கொடுக்கும். தற்கால உரை: எப்பற்றும் இல்லாதவராக இருக்கிறோம் என்று சொல்லுவார் மேற்கொண்ட தீயொழுக்கம், பின்னர் என்ன செய்தோம், என்ன செய்தோம் என்று வருந்தத் தக்கத் துன்பம் பலவற்றைத் தரும். புதிய உரை: எந்தப் பற்றும் எமக்கில்லை என்று பொய், களவு வாழ்க்கை வாழ்பவர்கள், குத்து, வெட்டு, கொல்லு என்று மக்களால் விரட்டியடிக்கப்படும் துன்பங்கள் பலவற்றையும் பெறுவார்கள்.