பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/442

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 441 விளக்கம்: யாழ் என்றதும் வீணை என்று தான் நினைவுக்கு வரும். ஆனால் யாழ் என்றால் ஆந்தை என்னும் ஒரு பொருளும் உண்டு. யாழ் என்பது வீணை, கின்னரம் என்று அழைக்கப்பட்டாலும், அவற்றிற்கும் ஆந்தை என்ற ஒர் அர்த்தம் இருந்து கொண்டே இருக்கிறது. ஆந்தை பகலெல்லாம் மரப்பொந்து, பாழிடங்களில் தூங்கி, இரவில் இரைதேடப் புறப்படும். அது வஞ்சனை நிறைந்த பறவை. ஆந்தையின் ஒலியை அலறல் என்பார்கள். அபசகுனம் என்பார்கள். ஆகவே, ஆந்தை என்றாலே வஞ்சனை மிக்கது. கொடியது. அதனால்தான் கோடு என்றும் கொடிது என்றும் வள்ளுவர் குறித்துக் காட்டினார். A. போலித் துறவிகளும், தங்கள் வாழ்க்கையைப் பகலில் மறைத்து, இரவில் வெளிப்படுத்திக் கொள்வார்கள். ஏமாற்றுவதற்கு இரவு நேரம் சாதகமானது. நேரம் இரவு. நெஞ்சமோ கரவு, நிலைமையோ துறவு, பாமரர்கள் ஏமாற இதற்கு மேல் என்ன வேண்டும் ? அதனால்தான் வினைபடு என்கிறார். பால் என்றால் செயல்படும் இடம்; ஏமாற்றுகிற குணம்; வஞ்சிக்கின்ற கடமை; அதுவேதன் வாழ்வின் உரிமை என்று வாழ்கிற போலித் துறவியை உவமித்துக் காட்ட, ஆந்தையை விட, வேறு பொருத்தமான உயிர் எதுவுமே இல்லை. 6 வது குறளில் பஞ்சகத் துறவிகளை வன்கனார் என்றும், 7வது குறளில் விடத் தன்மை வாய்ந்த கீழ் மக்கள் (கரியார்) என்றார். ஆக, ஒன்பதாம் குறளில், வஞ்சகப் பறவையின் வடிவாக விளங்கும் வேடதாரிகள், வஞ்சனையே செய்கிற அசபதிகள். அதாவது பரமபத நூல்களைப் படிப்பார்கள். ஆனால், அதன்படி ○ “ ! سیباً - +. - 2-, - * + * நடக காதவாக மச11 சய யாதவாகள். இவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள் என்று இந்தக் குறளில் மக்களை எச்சரிக்கின்றார்.