பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/452

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 451 ஆகவே, பிறர் பொருளைப் பேராசையால், பொய், வஞ்சனை, குதினால் பெற்ற வாழ்வு, சுவைப்பது போலத் தோன்றினாலும், சுகமாக இருப்பது போலக் காட்சியளித்தாலும், அந்த வாழ்வானது, வளர்ந்த புதராகத் தான் அமையும். விளைந்த பதராகத்தான் அலையும். அங்கே ஆவதுபோல இருந்து, சாவது போல அழிந்து ஒழியும். ஏன் அந்த நிலை? செல்வம் அழிந்தால் வேறு செல்வம் தேடிக் கொள்ளலாம். செல்வமே கிடைக்காவிட்டாலும், வறுமையோடு போராடியும் வாழலாம். களவினால் வந்த செல்வம் இழவாகப் போய்விட்டது என்று சமாதானப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் வள்ளுவரின் சிந்தை வேறு விதமாக சிந்திக்கிறது. களவுக்கு முன்னால் இருந்த அவனது வாழ்வு பால்போல இருந்தது. களவுக்குப் பின்னால் வந்த வாழ்வு, பாலில் கலந்த நஞ்சு போல மாற்றி விட்டது. பாலும் அழிந்தது. பாலைப் பருகியவனும் அழிந்தான். இதுதான் வாழ்க்கையின் உண்மையான யதார்த்த நிலை. இதைத்தான் வள்ளுவர் அளவிறந்து என்றார். அளவு கடந்து இறந்து படுவது. அழிந்து படுவது என்றார். இந்தச் சொல்லை, அறவிறந்தும் என்றும் பலர் உரைக்கின்றார்கள். அறவிறந்து என்றால் முற்றும் முழுதுமாக வாழ்வே அழிந்து றது. களவாடியவன் பெற்றது வாழ்வு அல்ல. புதர் என்கிறார். புதர் அழிக்கப்படுவது போல, அவனது வாழ்வும் நிலைக்காது, செழிக்காது, சுவைக்காது. கவைக்குதவாது என்று கட்டியங் கூறுவதுபோலத் தெளிவு படுத்துகின்றார். 284. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும். பொருள் விளக்கம்: கன்றிய முதிர்ந்துபோன காதல் - கொலை, கொல்லல் போன்ற வேட்கையை உடைய களவின் கண் - களவு செயலினால் விளைவு = உண்டாகும் வாழ்க்கையும் கண் - அதன் வழி பெறுகிற சுகமான உடம்பும் வியா - சந்தேகமில்லாத அழிவையும் விழுமம் தரும் துன்பத்தையே பெறும்