பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 43 தற்கால உரை: நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால் அம்மழை இல்லாமல், எத்தகைய உயர்ந்தவரிடத்தும் ஒழுங்கு இல்லாமல் போய்விடும். புதிய உரை: - உயிர்வாழும் அனைவருக்கும், உலாவரும் அனைத்திற்கும் நீர் அமுதமின்றி எந்தப்படைப்பும், எந்த நிறைவும் ஏற்படாது. விளக்கம்: - உவகையும், உடலுக்குத் துய்மையும் மனத்துக்கு வாய்மையும் தருகிற நீரால், உலகவாழ்வு உயர்வாக அமைகிறது. அந்த நீரும் வான் ன் வற்றாத கொடையாக வழங்கப்பட்டு வருகிறது. நீரில்லாமல் எந்தவித படைப்பும் இல்லை. செயல்களில் எடுப்பும் இல்லை; மிடுக்கும் இல்லை. உயிர்களிடையே உடலை ஒழுங்குறக் காக்கும் நன்னடையும் அமைவதில்லை. ஆகவே, உலகின் வன்மைக்கும், நன்மைக்கும் உயிர்வாழ் மக்களின் உடல் திண்மைக்கும் விடாது ஒழுகுகிற செயலாண்மைக்கும் நீரே நிலைத்து ஒழுகுவதால்தான் இந்த அதிகாரத்தை வான்சிறப்பு என்று வானளாவப் புகழ்ந்திருக்கிறார். பத்தாவது குறளில் உலகுக்கு உவகையூட்டுகிற அமுதவாழ்வு வான்தவறாது ஒழுகிக் தருகின்ற நீரொழுக்கினால் நிலையாகிறது; நிறைவாகின்றது என்று வள்ளுவர் வான் சிறப்பின் தேன் சிறப்பைத் தெளிவாகத் திரட்டித் தந்திருக்கிறார்.