பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/493

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


492 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 311. சிறப்பு:ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள் பொருள் விளக்கம்: சிறப்பு ஈனும் - தலைமை பேறு தரத்தக்க செல்வம் பெறினும் - சொர்க்க வாழ்க்கை பெறினும் பிறர்க்குஇன்னா - மற்றவர்களுக்குக் கேடுகளை செய்யாமை = செய்யாத தேகத்தைக் காப்பது மாசற்றார் = பெருமை உடையோரது கோள் = வலிமையாகும் சொல் விளக்கம்: சிறப்பு = தலைமை, உற்சவ ஆராதனை: ஈனும் தரும் செல்வம் - சொர்க்க வாழ்க்கை பிறர்க்கு இன்னா = மற்றவர்களுக்கு கேடுகள்: கோள் - வலிமை முற்கால உரை: யோகமாகிய சிறப்புத் தரும் அனிமா முதலிய செல்வங்களைப் பிறர்க்கு இன்னா செய்து பெறலாம் ஆயினும், அதனை செய்யாமை, ஆகமங்கள் கூறியவாற்றான் மனம் தூயாரது துணிவு. தற்கால உரை: பெரும் சிறப்பைத் தருகின்ற அழியாத செல்வத்தைப் பெருவதாக இருந்தாலும், பிறருக்குத் துன்பம் செய்யாது இருத்தலே குற்ற மற்றவரின் கொள்கை ஆகும். புதிய உரை: தலைமைப் பேறு தரத்தக்க சொர்க்க வாழ்வு பெறுவதாக இருந்தாலும், மற்றவர்களுக்குத் தீங்கு இழைக்காத தேகத்தைக் காப்பது என்பது, பெருமை உடையோரின் வலிமை ஆகும். விளக்கம்: தீங்கு இழைக்காத தேகம் என்பதைக் குறிக்கச் செய்யாமெய் என்றார் வள்ளுவர். உடலைக் கெடுத்துப் பாதகம் செய்பவை என உள்ளுக்குள்ளே நடமாடும் ஏழு குணங்களைக் கூறுவார்கள். 1. கர்வம் 2. அற்ப ஆசை 3. காமம் 4. 1903, 5. போஜனப்பிரியம் 6. கோபம் 7. சோம்பல் இந்த ஏழு பாதகங்களையும் வெற்றிகரமாகக் கடந்து வாழ்பவர்களைத் தான் மாசற்றார் என்றார்.