பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 19.3 இப் படிப் பட்ட மாசற் றாருக்கு உடல் வலிமையும், மன வலிமையும் இயல்பாகவே இருக்கக் கூடியனவாகும். மனதாலும், உடலாலும், வலிமை கொண்டவர்கள், மற்றவர்களுக்குத் தீங்கிழைக்க விரும்பமாட்டார்கள். ஏனெனில் வலிமையானது பண்பாட்டைப் பாராட்டுகிறது. பாடறிந்து ஒழுகச் செய்கிறது. அதனால் பதவி ஆசையோ, தலைமைக் கர்வமோ, செல்வச் செருக்கோ - எதுவும் அவர்களைப் பாதிக்காது என்கின்ற, பேராண்மை மிக்க பண்பாற்றலையே முதல் குறளில் கூறுகிறார். 312. கறுத்து இன்னாசெய்த அக்கண்ணும் மறுத்து இன்னா செய்யாமை மாசற்றார் கோள் பொருள் விளக்கம்: கறுத்து = மனக்குறைவுபட்டு இன்னா செய்த = பொல்லாங்கு செய்த அக்கண்ணும் = பகைவரது உடம்புக்கும் மறுத்து - தவறிப் போய் இன்னா செய்யாமை = தீங்கு செய்தாத தேகத்தைக் கொண்டிருப்பது மாசற்றார் - காம, வெகுளி, மயக்கம் தீர்த்த பரிசுத்தமானவர்களின் கோள் = வலிமையாகும். சொல் விளக்கம்: கறுத்து - மனக்குறைப்பட்டு, கண் உடம்பு; மறுத்து - தவறி மாசற்றார் = பரிசுத்தவான்; கோள் = வலிமை முற்கால உரை: தம் மேல் செற்றம் கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் ^ - ...,' - 轟 * & 2x or /Y - - و ... . در ۹ - مرگ . : செய்தவிடத்தும், மீண்டும் தாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு. தற்கால உரை: ஒருவன் வெகுண்டு தமக்குத்துன்பம் செய்த போதிலும், திரும்ப அவனுக்கு எவ்விதத் துன்பத்தையும் செய்யாமல் இருப்பதுதான், குற்றமற்ற உயர்ந்தோரின் கொள்கை ஆகும். புதிய உரை: மனக்குறையால் வெறுத்துத்துன்பம் இழைக்கின்ற, பகைவனது உடலுக்குத் தவறியும், துன்பம் இழைக்காத தேகம் கொண்ட பரிசுக்த வான்களுக்கு, அதுவே பெருமை தரும் வலிமையாகும்.