பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ஆன் ஆம் ஆன்மாபோன்றவற்றால் மாணா - மாட்சிமைப்படாத தீமைகளை யாமைசெய் - ஒருநாளும் செய்யாதிருப்பது தலை = சிறந்ததாகும் சொல் விளக்கம்: மனத்து+ஆன் - மனம், ஆன்மா, மாணா - மாட்சிமைப் படாத யாமை - பரணி, ஒருநாள்; தலை = சிறந்தது முற்கால உரை: மனத்தோடு, உளவாகின்ற இன்னாத செயல்களை எக்காலத் தும், யாவர்க்கும், சிறிதாகினும் செய்யாமை தலையாய அறம். தற்கால உரை: எவ்வகையாலும், எப்பொழுதும், எவர்க்கும் மனம் அறிய துன்பந்தரும் செயல்களை செய்யாது இருத்தலே சிறந்ததாகும். புதிய உரை: எந்த வகையாலும், எப்பொழுதும், யாவர்க்கும், தம் மனதுக்கும், ஆன்மாவுக்கும் மாட்சிமைப்படாத துன்பச் செயல்களை, ஒரு நாளும் செய்யாமல் இருப்பதே பெருமைக்குரிய வாழ்வாகும். - விளக்கம்: பிறருக்குத் துன்பங்களை ஒரு பொழுது செய்யலாம். ஏதாவது சிறுவகையால் செய்யலாம், யாரேனும் ஒருவர்க்குச் செய்யலாம் என்று மனதாலும், ஆத்ம சுகத்தினாலும் எண்ணுவது மனித இயல்பு. அப்படி ஒருபொழுது, ஒரு அளவு, ஒரு உயிர் என்று எண்ணவே கூடாது என்பதற்காகத்தான், எப்பொழுதும், யாருக்கும், எவ்வகையாலும் என்று அறுதியிட்டு, உறுதியாகச் சொல்கிறார். மனதுக்கு மேன்மை தராததைக் குறிக்கவோ, 'மானா' என்கிறார். மாணா என்றால் மாட்சிமைப்படாத, மாட்சிமை என்றால் அமைதி என்று அர்த்தம் தன் மனம், ஆன்மாவிற்கு அமைதி வேண்டும் என்றால், அமைதிகாக்க ஒரு நாள் கூடத் துன்பம் இழைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில், 'யாமை' என்ற சொல்லைப் பெய்திருக்கிறார். அப்படியவன் துன்பம் இழைக்காத போது சிறந்தவனாகிறான். பெருமைக்குரியவன் ஆகிறான். வான் புகழ் பெறும், வளர்மிகு தலைவன் ஆகிறான் என்று 'தலை என்ற சொல்லைச் சொல்லி, ஏழாவது குறளில் அறனுக்கு ஆக்கமும், ஊக்கமும் தருகிறார்.