பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/513

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


うl2 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ○ l2 - - புதிய உரை: உயிர்வதை செய்யாத ஒழுக்கத்தை ஏற்றுக் கொண்டு, உயர் வாழ்வு வாழ்பவன் வாழ்கிறகாலம், மற்றும் எதிர்காலம் எல்லாம் வீணே அழியாமல், அவனது ஆன்மா அனுபவித்து மகிழ்கிற வரலாறு ஆகவே அமையும். விளக்கம்: வாழ்க்கை என்பதற்கு ஒரு சுவையான விளக்கம் தருவார்கள். அதாவது, சாகின்ற மனிதனுக்கும், சாகாத எமனுக்கும் இடையே நடைபெறுகிற போராட்டம் என்று. அந்தப் போராட்டத்தில் மனிதன் சலித்துப் போகிறான். இளைத்துக், களைத்து, இறுதியில் தன்னைச் சாவின் கையில் ஒப்படைத்துக் கொள்கிறான். அங்கே, மனித உடல் கரைகிறது. அவன் வதிந்த வாழ்வு காற்றுப்போல கரைகிறது. ஆனால் விளைத்த வரலாரோ வாழ்ந்து கொண்டு இருக்கிறது. அப்படி வாழ்கிற வாழ்வைத்தான் ஆன்மா அனுபவிக்க விரும்புகிறது. இந்தக் கூர்மையான குறிப்பைத்தான் வள்ளுவர் இந்தக் குறளிலே குறித்து இருக்கிறார். மற்றவர்கள் எழுதிய உரையில், கொல்லாமையைக் கடைப்பிடிப்பனிடம், கூற்றும் வராது. சாவும் நேராது என்பதுபோல, ஒரு பிரமையை உண்டு பண்ணியிருக்கிறார்கள். ஆனால் வள்ளுவரோ, நிதர்சன உண்மையாக பிற உயிர்களை வதை செய்யாதவனை வரலாறு வாழ்த்தும். வையகம் வணங்கும். அதனைச் செவிமடுக்கும் அவனது சிந்தையும், செந்தமிழ்த் தேன் குடித்ததுபோலக் களிப்புறும் என்கிறார். 327. தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை பொருள் விளக்கம்: நீப்பின் பற்றற்ற நிலையானதுறவுக்குரிய உம் - ஆக்கப்பொருள் தன்னுயிர் = தன் ஆத்மா பெறுவதற்கு உரிய சூழல் அமைவதாக இருப்பினும் பிறிதுதான் = பிற ஆன்மாக்களின் இன்னுயிர் = பெருமை மிகுந்த ஜீவனானது நீக்கும் = நீக்குகிற வினை செய்க செயலைச் செய்யக் கூடாது