பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/534

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை ó33 341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். பொருள் விளக்கம்: யாதனின் - சந்தேகமில்லாமல் ஒப்பில்லாத 'யாதனின் - அரக்கத்தனமான செயல்களிலிருந்து நீங்கியான் - வெளி வந்தவன் நோதல் இலன் வாழ்க்கை படுதலான பலவீனமோ, துன்புறுதலோ இல்லாமல் இருப்பதால் முன்பு இருப்பதை விட மிகுதியடை அதனின், அதனின் - இனிமையில் வாழ்கிறான். சொல் விளக்கம்: யாது - அரக்கத்தனம்; யா - இல்லை, சந்தேகம் தனின் = ஒப்பின்மை; நோதல் பலவீனமடைதல், பழதுபடல் அதனம் = அதிகம், மிகுதி முற்கால உரை: ஒருவன் யாதொரு பொருளின் நீங்கினான் அவன் அப்பொருளால், அப்பொருளால் துன்பம் எய்துதல் இலன். தற்கால உரை: ஒருவன் எல்லாவற்றையும் ஒருங்கே துறக்காவிட்டாலும், எந்தயெந்தப் பொருள்களிடமிருந்து பற்று நீங்கியவனாக இருக்கிறானோ அவன், அந்த அந்தப் பொருள்களினால் துன்பம் அடைதல் என்பது இல்லை. புதிய உரை: ஒப்பபின்மை இல்லாத அரக்கச் செயல்களில் இருந்து விடுபட்டு, வாழ் பவன் வாழ் வில், பழுதோ, பலாவீனமோ, மிகுதியாக வரும் துன்ப மோ இல்லாதவனாக வாழ்கிறான். விளக்கம்: கேடுகளை விளைவிக்கும் செயல்களில் கொடுர மானவற்றையே அரக்கத்தனம் என்பார்கள். ஒருவன் மனதிலே, கேடுகளை விளைவிக்க வேண்டும் என்று எண்ணுகிற பொழுதே, அரக்கத்தனமும் சேர்ந்து கொள்கிறது. அதைத்தான் யாதனின் என்றார். அரக்கத்தனம்மாறி, இரக்கத்திற்குள்ளே அவன் பிரவேசிக்கின்ற பொழுது, அவனது வாழ்விலே வன்மை குறைகிறது. அதனால் மனதிலே இனிமையும், உடலிலே வலிமை மிகுதியும்,