பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/573

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 38. ஊழ் ஒழுக்கத்தை உறுதியாகக் கடைப் பிடிக்க உயர்நெறிகளை, ஒப்பற்ற முறையில், உன்னத வழிகளையெல்லாம் முப்பத்தேழு அதிகாரங்களில் முனைப்புடன் விளக்கி வந்த வள்ளுவர், ஒழுக்கத்தை வளர்க்கும், உயர் நெறிகளை, உன்னத வழிகளை எல்லாம். உடலுக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதை ஊழ் அதிகாரத்தில் உரைத்து இருக்கிறார். ஊழ் என்பதற்குப் பழவினை. விதி, வினைப்பயன்முறை, பூர்வ ஜென்மம், செய்தொழிலின் பயன் என்றெல்லாம் பொருள்கள் உண்டு. மதியென்பது சிந்தித்தல். விதியென்பது சிந்தித்த செயலிண் வெளிப்பாட்டு விளைவு. ஒன்றை நாம் செய்கிறோம். அந்த நேரத்தில் ஒரு பயனைத் தருகிறது. பின்னர் அந்தக் காரியத்துக்கும் நமக்கும் தொடர்பு இல்லாமல் போய்விடுகிறது. அதற்குப் பெயர் செயல் என்பதாகும். நாம் செய்யும் செயலானது ஏதாவது ஒரு பலனைத் தொடர்ந்து தந்துகொண்டே இருந்தால் அதற்கு 'வினை என்று பெயர். இந்த வினையானது, செய்த வினைக்கேற்ப இரண்டு வகைப்படுகிறது. நன்மையை நல்குகிற வினைக்கு நல் வினை என்றும், தீமையை உண்டாக்குகிற வினைக்குத் தீவினை என்றும் பெயர். * இந்த இரு வினைகளும், நாம் செய்த பழவினை என்று அழைக்கப்படுவதற்கு வேறு ஒரு பெயர்தான் ஊழ்வினை. இந்த ஊழ்வினையானது வந்து உடலை உறுத்தும். வாழ்வையே வருத்தும் என்பார்கள். அவனவன் செய்கிற வின்ைக்கேற்ப அவன் உடல் ஆட்படுகிறது. அல்லற்படுகிறது என்பதைத்தான் ஊழ்வினை என்ற அதிகாரத்தில் விளக்குகிறார். உடலின் உண்மையான மேன்மையை அறிந்து கொள்ளுங்கள் என்று மெய்யுணர்விலும், உடலை நாசப் படுத்துவதில் o -" - • *, er : C : , , * - , or + s^ ~ or or 2 *. அவாவுக்குள ஆட காலலாத தனததையும வளககய வளளுவா! Y * - - - = ○ . . ." 2. o- - - o - -- o r; o - - .ெ I - அடுத்ததாக, அவரவர் செய்யும வினைகள்தான் நீத்திய உதவியையும் கொடுக்குமென்று ஊழ் என்ற அதிகாரத்தைப் பின்னதாக வைத்து இருக்கிறார்.