பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 93 நிறை = உடல் வலிமை, மனவலிமை, சொல் வலிமை ஆகிய மூன்றும் அழிவின்றி நிறைந்திருக்கும் வலிமையில் காக்கும் காப்பே - தன்னைக் காத்துக் கொள்கின்ற காவலே தலை பெருமை மிகுந்ததாய் (தலையகமாக) விளங்குகிறது. சொல் விளக்கம்: நிறை = உடல் வலிமை, மனம், சொல் வலிமைகள் முற்கால உரை: பெண்கள் கற்பால் தங்களைக் காத்துக் கொள்ளுதலே தலைமையான காவல் என்பதாம். தற்கால உரை: மகளிரின் கற்பைச் சிறைக்காவல் மூலம் காக்கும் காவல்முறை ஒரு பயனையும் தராது. அவர்கள் தம் மன உறுதியால் தான் கற்பைக் காத்துக் கொள்ள வேண்டும். புதிய உரை: ஒரு பெண்ணின் அழகு அவளுக்குக் காப்பல்ல. அவளை அடிமைப்படுத்துகிற ஆணும், மதில் சுவர் தடுப்பும் காப்பல்ல. அவள் உடல் வன்மை. மன உறுதி, நல்லொழுக்கம் போன்ற சொற்களின் நிறைவுதான் நிலையான காப்பாகவும் தலையான காப்பாகவும் விளங்கும். விளக்கம்: 54, 55, 56 ஆகிய குறள்களில் தனித்தனியாக ஒரு பெண்ணின் உடல் வளம், மனவளம், சொல்வளம் ஆகிய, மூன்றுமே நிறைவான அரண், வலிவான மதில், என்று வள்ளுவர் குறியிட்டுக் காட்டுகிறார். ஒருபெண்ணின் பிற அழகு, பிற பொலிவு எல்லாம் உதவாது. இந்த மூன்று நிறைகளே முன்னின்று காக்கும். உயர்த்தும், தற் கட்டுப்பாடு என்பது, வளமான நல்லுடலில் தான் தழைத்தோங்கி நிற்கும் என்பது வள்ளுவரின் நம்பிக்கையாகும். 58. பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு புத்தேளிர் வாழும் உலகு பொருள் விளக்கம்: பெண்டிர் = முப்பெரும் தகுதிகளும் பெற்ற பெண்களை பெற்றான் = துணைநலம் தேடுகிற ஆணும் பெறின் = பெறுகிறபோது பெருஞ்சிறப்பு பெறுவர் = பெருமை மிகுந்த புகழினை அடைவர் வாழும் உலகு = அவர்கள் வாழ்கிற சமுதாய உலகும். புத்தேளிர் = புதுமையானதாக மிளிரும்.