பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6. வேட்டலின்

        அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
        உயிர்செகுத்து உண்ணாமை நன்று

என்பது திருக்குறளில் ஒரு குறள்.

இது ‘புலால் உண்ணாமை’ என்ற தலைப்பில் வந்த ஒன்று. இத் தலைப்பும்கூட ‘அருளுடைமை’ 'தவம்’ என்ற இரு தலைப்புகளுக்கிடையில் அமைந்து ஒரு தனிச்சிறப்பைப் பெற்றிருக்கிறது.

அறம் என்பது ‘கடமை’ என்றாகும். கடமையில் தலையாயது நல்லதைச் செய்து அல்லதைத் தவிர்ப்பதே! ஆதலின் இக்குறள் ‘நன்று’ என்று கூறி நல்லது ஒன்றைச் செய்யத் தூண்டுகிறது.

நல்லது கெட்டது என்பது எழுத்தில், பேச்சில், எண்ணத்தில், செயலில் மட்டுமல்ல; உண்ணும் பொருளிலும் உண்டு என்று உணர்த்துகிறது இக் குறள்.

‘உண்ணாமை நன்று’ என்பதிலிருந்து, உண்ணக்கூடாத பொருள்களில் புலாலும் ஒன்று என்பது வள்ளுவர் கருத்து என அறியவேண்டியிருக்கிறது.

‘உண்பது தீது’ என்று கூறாமல், உண்ணாமை நல்லது என்று கூறியிருப்பது தமிழ்ப்பண்பும், தமிழர் நெறியும் ஆகும் என்பதனை இக் குறள் நன்கு அறிவிக்கிறது.

புலாலுண்ணாமை மட்டுமல்ல, உயிரைப் போக்காமையும் நல்லது என்பது இக் குறளின் கருத்து. இதனை ‘உயிர் செகுத்து’ என்ற சொற்கள் அறிவிக்கின்றன.

தன் ஊனைப் பெருக்குவதற்காகப் பிற ஊனைத் தின்பதும் தன் உயிரை வளர்ப்பதற்காகப் பிற உயிர்களை அழிப்பதும் மக்கட் பண்புடையவர் செயல் அல்ல என்பதை இக் குறள் கூறாமற் கூறுகிறது.

தொல்லைகளைக் கண்டு ஈ, எறும்புகளைக் கொல்லு வதைவிட, பயங்கொண்டு பாம்பு தேள்களைக் கொல்லு வதை விட, வஞ்சங்கொண்டு பகைவர்களைக் கொல்லு