பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42


மோ?' என்று ஒருவன் அஞ்சி ஏங்குவதிலும் அதிகமானது என்பதை. “இன்றும் வருவது கொல்லோ” என்ற சொற்கள் அறிவித்துக்கொண்டிருக்கின்றன.

உழுது உழைத்துண்டு வாழ முடியாதவனை வறுமை கைப்பற்றி இரந்துண்ணும்படி செய்துவிடும். அது உப்புக்கும் கஞ்சிக்கும் கூற்றாக இருக்குமே தவிர, வாழ்வாக இராது. அஞ்சி நடுங்கி, இரந்துண்டு வாழும் இந்நிலையை எண்ணும்பொழுது அதைவிட மடிவது நல்லது எனத் தோன்றும் என்பன இவ்வதிகாரத்தின் திரண்ட கருத்துக்கள், இதுவும் நம்மைக் கொல்வது போன்றிருக்கிறது.

குறளைப் படியுங்கள் மறுமுறையும்,

       "இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
        கொன்றது போலும் நிரப்பு."

வாழ்க குறள் அறம்!
வளர்க குறள் நெறி!!