உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

யின. என்னே அவரது அறிவின் பெருமை! படியுங்கள் குறளை மறுபடியும்.

       "நோய் எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
        நோயின்மை வேண்டு பவர்."

எடுங்கள் குறளை! படியுங்கள் நன்றாக! சிந்தியுங்கள் ஆழ்ந்து! காணுங்கள் உண்மையை! அந்த அளவோடு நின்று விடாதீர்கள். செயலிலும் செய்து காட்டிச் சிறப்பெய்தி வாழுங்கள்!

வாழட்டும் திருக்குறள்!
வளரட்டும் குறள்நெறி!