உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

வேண்டும். சாவை மகிழ்வோடு வரவேற்கின்றேன். இன்னும் சில நாட்கள் சென்று தூக்கிலிடுவதைவிட இன்றே தூக்கிவிட்டால் இன்னும் மகிழ்வோடு சாவேன்' என நெஞ்சு நிமிர்ந்து கூறினான்.

நான் பெரிதும் வியப்படைந்ததோடு, “நோய் எல்லாம் நோய் செய்தார் மேல்” என்ற குறளும் பொய்த்து விட்டதே? என்ற ஐயமும் கொண்டு, “சாவை விரும்புவதிலும் விரைவாக விரும்புவது ஏன்!” என்று வினவினேன்.

“என் தந்தையைச் சுவரில் சாய்த்துவைத்துக் கழுத்தில் கையை வைத்து நெறித்தேன். அப்போது அவரது விழிகள் பிதுங்கின. ”அட பாவிப் பயலே, இதற்காகவா உன்னை வளர்த்தேன்?“ என்பது அவர் வாயிலிருந்து வந்த கடைசிச் சொற்கள், விழி பிதுங்கிய அவரது முகத்தோற்றம், ஒவ்வொரு வினாடியும் என் கண்முன்னே தோன்றிக்கொண்டேயிருக்கிறது. அவரது கடைசிச் சொற்கள் என் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன. உண்ண, உறங்க, படிக்க, படுக்க, இருக்க என்னால் முடியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் கொலைத் துன்பத்திலும் கொடிய துன்பத்தை அனுபவித்துக் கொண்டேயிருக்கிறேன். நான் இறப்பதன்மூலம் இத் துன்பம் ஒழிந்துவிடும். ஆதலின் சாவை இன்றே, இப்போதே மகிழ்வோடு வரவேற்கிறேன்” என்றான்.

எப்படி “நோய் எல்லாம் நோய் செய்தார் மேல வாம்” என்ற குறளின் பொருள்? இதனால் “நாம் பிறர்க்குச் செய்யும் துன்பம் அனைத்தும் பின் நம்மையே வந்து வருத்தும்” என்பது நன்கு விளங்குகிறது. இவ் உண்மையை நாம் இப்பொழுதுதான் காண்கிறோம். இதனை வள்ளுவர் கண்டு இரண்டாயிரம் ஆண்டுகளா