பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

18. அவாவறுத்தல் (இ- ள்) அவாவாகிய துன்பங்களுள் மிக்க துன்பம் கெடு ாயின், இன்பமானது இடையறாமல் வந்து மிகும். (எ-று)

இஃது இன்பமும் இதனாலே வருமென்றது.

369. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும்.

(இ-ஸ்) விரும்புங்கால் பிறவாமையை வி ரு ம் பு த ல் வேண்டும்; பிறவா மைதான் பொருள்களை விரும்பாமையை விரும்ப வரும், (எ- று)

இது பிறவாமையும் இதனானே வருமென்றது. 9

370. ஆசா வியற்கை யவாதீப்பி னந்நிலையே

பேரா வியற்கை தரும்.

(இ-ள்) நிறையாத இயல்பினையுடைய ஆசையை விடுவ னாயின், அது விட்ட அப்பொழுதே அழியாத இயல்பினைத் தரும், (எ-று)

பேரா இயல்பாவது என்று மொருபடிப்பட்டது. இது தன்னு டைய உருவத்தைப் (பெறுமென்றது). 10

(சத்தியாசமாகிய துறவறவியல் முற்றிற்று)