பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 1. ஊழ்

4 ஊழ்-1. ஊழ்.

ஊழாவது முறை; அஃதாவது முன்பு செய்த வினை பின் பு சிளையும் விளைவு மேற் கூறிய அறப்பகுதியும் இனிக் கூறுகின்ற பொருட் பகுதியும் இன்பப் பகுதியும் முன்செய்த நல்வினையான் வருதலும் இவற்றிற்கு மாறான பாவமும் வறுமையும் துன்பமும் தீவினையான் வருதலும் அறியாதே இதனை உலகத்துப்பன் மக்கள் தமது முயற்சியால் வந்த தென்பான்றே? அதற்காக இது கூறப் பட்டது. ஒருவன் செய்த வினை வழுவின்றிப் பயத்தல் அறத்தினான் வருமாதலான், அறத்தினிறுதிக்கண் கூறப்பட்டது.

371. ஆகூழாற் றோன்று மசைவின் மை கைப்பொருள்

போகூழாற் றோன்று மடி.

(இ-ள்) ஒருவனுக்கு ஆக்கங் கொடுக்கின்ற ஊழ் தோற்றி னால் முயற்சி தோன்றும்; அழிவு கொடுக்கின்ற ஊழ் தோற்றினால் மடிதோன்றும், (எ-று)

இஃது ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் ஏதுவான முயற்சியும் முயலாமையும் ஊழால் வருமென்றது. 1

372, பேதைப் படுக்கு மிழவூ ழறிவகற்று

மாகலூ முற்றக் கடை

(இ-ள் ) அறியாமையை யுண்டாக்கும்; கெடுக்கும் ஊழ் தோன்றினால், அறிவை விரிக்கும், ஆக்கும் ஊழ் தோன்றினால், (எ-று)

இஃது அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது 2

373. துண்ணிய நரல் பல கற்பினு மற்றுந்த

னுண்மை யறிவே மிகும்.

(இ-ள்) நுண்ணிதாக வாராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும், பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவு மிகுத்துத் தோற்றும், (எ-று)