பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

4. கேள்வி

417 . செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ்

செல்வத்து ளெல்லாத் தலை.

(இ-ள்) செல்வத்துள் வைத்துச் செல்வமாவது, செவியுணர் வுடைமையாகிய செல்வம்; பயன்படுமிடத்து மற்றுள்ள செல்வம் - ல் லா வற்றினும் தலையா ம் ஆகலான், (எ-று). 7

4 18 செவியுணவிற் கேள்வி படையா ரவியுணவி

னான்றாரோ டொப்பர் நிலத்து.

(இ-ன்) செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும், அவியை யுணவாக வுடைய தேவ

ரோடு ஒப்பர், (எ-று) .

இஃது, எல்லாரானும் நன்கு மதிக்கப்படுவரென்றது. 8

419. செவியுற் சுவையுணரா வாயுணர்வின் மரக்க

ளவியினும் வாழினு மென்.

(இ-ள்) செவியால் நுகரும் இன்பத்தை யறியாது வாயால் நுகரும் இன்பத்தையறியும் மாக்கள் செத்தால் வருந் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மையாது? உலகத்தார்க்கு, (எ-று).

இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது. 9

420. கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற்

றோட்கப் படாத செவி.

(இ-ள்) ஒசை மாத்திரம் கேட்டனவாயின், அதுவுங்கேளாத செவி போலும்; நல்லோர் கூறுஞ் சொற்களால் துளைக்கப்படாத செவி, (எ-று).

இது கேள்வியில்லாதார் செவிடரென்றது. 10