பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161

15. சுற்றந்தழால்

(இ-ள்) காக்கை ஒரிரை பெற்றால் அதனை மறையாது தன் இனமாயின வெல்லாவற்றையும் அழைத்து உண்ணும்; அதுபோலச் செல்வம் பெற்றால் அதனைத் தன் சுற்றத்தா ரெல்லாரோடும் நுகர்வார்க்கே ஆக்கம் உளதாவது, (எ- று) .

இது மக்கள் பலருண்டானல் எல்லார்க்கும் பகுத்து உண்ணக் கொடுக்க வேண்டும் என்றது. இவை மூன்று பாட்டானும் அன்ப றாத மக்கட்குச் செய்யுந் திறங் கூறிற்று. 8

529. தமராகித் தற்றுறந்தரார் சுற்ற மமராமைக்

காரண மின்றி வரும்.

(இ-ள்) முன்பு தனக்குத் தமராகி வைத்துத் தன்னை விட்டுப் போனவர்கள் ( பின்பு வந்து) சுற்றமாதல், தான் அவர்மாட்டு அம ராமைக்குக் காரணம் இன்றி யொழுகவரும், (எ-று) .

காரணம் இன்றி ஒழுகுதலாவது அவனுடைய சுற்றத்தோடு மேவி ஒழுகுதலும் அவைபோல் வனவும். இது, விட்டுப்போன இராஜபுத்திரனைக் கூட்டிக் கொள்ளுமாறு கூறிற்று. 9

530. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்த

னிழைத்திருந் தெண்ணிக் கொளல்.

(இ-ள்) தன்னிடத்தினின்று நீங்கி ஒரு காரணத்தால் வந்த வனை அரசன் இனிமை செய்து வைத்துப், பின்பு காரியமானபடி பெண்ணி, அதற்குத் தக்கபடி கூட்டிக்கொள்ளுக, (எ-று).

எண்ணிக்கோடலாவது அவன் வந்த காரணத்தை எண்ணு தலும், ஒருவனாகில் அதற்குத்தக்கவும், பலருண் டாகில் அதற்குத் தக்கவும் எண்ணுதலும். இது மீண்டுவந்த இராஜபுத்திரனோடு செய்யும் திறன் கூறிற்று. 10