பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217

9. அவையறிதல்

அவை யறிதலாவது இருந்த அவையத்தாரையறிந்து அதற்கு தக்க சொல்லுதல். அரசன் குறிப்பறிந்தாலும் அவையறிந்து சொல்ல வேண்டு மாதலின், அதன்பின் கூறப்பட்டது.

711. அவையறிந் தாராய்து சொல்லுக சொல்லின்

றொகையறிந்த தாய்மை யவர்.

(இ-ள்) இருந்த அவையத்தாரை யறிந்து, அதற்குத் தக்க சொல்லும் திறனை ஆராய்ந்து சொல்லுக; சொல்லின் தொகையை

யறிந்த தூய்மையை யுடையர், (எ-று).

தொகையறிதல்-திறனறிதல். இது, அவையறிந்து ஆராய்ந்து சொல்லுமாறு கூறிற்று. I

712 ஆற்றி னிலைதளர்த் தற்றே வியன் புல மேற்றுணர்வார் முன்ன ரிழுக்கு.

(இ-ள்) ஒரு நெறியின்கண் நின்றார் அந்நிலைமை குலைந் தாற்போல இகழப்படும், அகன்ற கல்வியைக் கேட்டறிய வல்லார் முன்னர்த் தப்புதல், (எ-று).

ஏற்று என்பது கேள்வியின்கண் வருதலின் கேள்வி ஆயிற்று. 1ே ல் தப்பு வாராமற் சொல்லவேண்டுமென்றார்; அதனால் வரும் குற்ற மென்னை என்றார்க்கு இது கூறபபட்டது. 2

713. நன்றென் றெவற்றுள்ளு நன்றே முதுவருண்

முந்து கிள வாச் செறிவு.

(இ ள்) நன்றென்று சொல்லப்பட்ட எல்லாவற்றுள்ளும் மிக நன்று, தம்மின் முதிர்ந்தார்முன் முந்துற்றுச் சொல்லாத அடக்கம், (எ-று)