பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219

6. அவையறிதல்

717. புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க நல்லவை யு.

ணன்கு செலச்சொல்லு வார்.

(இ-ள்) புல்லியாரிருந்த அவையின்கண் மறந்துஞ் சொல்லா தொழிக, நல்லாரிருந்த அவையின்கண் நல்லதனை இசையச் சொல்ல வல்லார், (எ-று) .

இது வெளியார் முன் வெள்ளையாயிருத்தலால் அவர் முன்பு சொல்லாதிருத்தல் என்றது. T

7 18. அங்கணத்து ளுக்க வமிழ்தற்றாற் றங்கணத்த

ரல்லார்முற் கோட்டி கொளல்.

(இ-ள்) அங்கணத்தின் உக்க அமிழ்தம் போல இகழப்படுவர்; தம்முடைய இனமல்லாதார் முன் சொல்லுவாராயின், (எ-று).

கல்வியுடையார் புல்லவையுள் சொன்னால் உளதாகுங் குற்ற மென்னையென்றார்க்கு, இஃது இகழப்படுவரென்றது. 8

719. அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின்

வகையறியார் வல்லதரஉ மில்.

( இ-ள்) அவையினது அளவை அறியாது ஒன்றைச் சொல்லுதலை மேற்கொள்பவர், சொல்லின் வகையும் அறியார்

ஆவர்; அன்றி வேறு வல்லதுவும் இலராவார், (எ-று).

வகை-சிலசொல். இது பிறரான் மதிக்கப்படார் என்றது. 9

720. ஒளியார்முன் னொள்ளிய ராதல் வெளியார்முன்

வான்சுதை வண்ணங்கொளல்.

(இ-ள்) ஒள்ளிய அறிவுடையார் முன்னர்த் தாமும் ஒள்ளிய அறிவுடையாராயிருத்தலும், வெள்ளறிவினார் முன்னர் வாலிய சுதை வண்ணம் போன்ற வெண்மையைக் கொண்டிருத்ததலும், அவை யறிதலாவது, (எ-று). 10