பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

10. அவையஞ்சாமை

அவையஞ்சாமையாவது அவையின்கண் அ ஞ் சா து சொல்லுதல்; அவை அறிந்தாலும் அஞ்சாது சொல்ல வேண்டு தலின், அதன்பின் கூறப்பட்டது.

721. பகையகத்துச் சாவா ரெளிய ரசிய

ர வையகத் தஞ்சாதவர்.

(இ-ள்) பகையின்கண் அஞ்சாது நின்று சாவார் பெறுதற்கு எயளிர்; அவையின்கண் அஞ்சாது சொல்லவல்லர் பெறுதற்கு அரியர், (எ-று).

இஃது, அவையஞ்சாமை அரிதென்றது. I

722. கற்றார்.முற் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற

மிக்காருண் மிக்க கொளல்.

(இ-ள்) தாம் கற்றதனைக் கற்றவர் கண்முன்பே இசையச் சொல்லித் தாம் கற்றதினினும் மிகக்கற்றார் மாட்டு அவர் மிகுதியாகக் கற்ற பொருளைக் கேட்டுக்கொள்ளுதல் அவையஞ்சாமையாவது, (எ-று)

கேட்டல் நாணா மையால் வருதலின் அஞ்சாமை ஆயிற்று. மேல் அரிதென்று கூறிய அவையஞ்சாமை எத்தன்மைத் தென் றார்க்கு இத்தன்மைத்தென்று கூறப்பட்டது. 2

723. கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார் முற்

கற்ற செலச்சொல்லு வார்.

(இ, ள்) கற்றாரெல்லாரினும் கற்றாரென்று சொல்லப்படு வார்; தாம் கற்றதனைக் கற்றார்முன்பு அவர்க்கு ஏற்கச் சொல்ல வல்லார், (எ-று).

இது, கற்றாரென்பது உம் அவையஞ்சா தவரையே என்று கூறிற்று. 3